Actress amalapaul insta post update:மேரேஜ்க்கு ஓகே சொன்ன ஆடை நாயகி.. மீண்டும் கணவருடன் காதலா!! ரசிகர்கள் குழப்பம்?
மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டவர் தான் அமலாபால். மலையாள நடிகையான இவர் முதன்முதலில் மைனா படத்தில் அறிமுகமானார். அந்த படத்தில் எளிமையான தோற்றத்தில் காட்சியளித்து அவரின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் கட்டி இழுத்தார். இன்றும் மைனா படம் அனைவராலும் பேசப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில், ஆடை, முப்பொழுதும் உன் கற்பனைகள், திருட்டு பயலே 2 என பல படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களை அதிகமாக சம்பாதித்து வைத்திருந்தார். இந்நிலையில் இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் செய்து கொண்ட இரண்டு வருடங்களுக்குள்ளேயே அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின் அமலாபாலின் போக்கு என்னவோ சரி இல்லை அமலா பாலுக்கு இனி ஆப்பு தான் என்று சொல்லும் அளவிற்கு அவரின் நடவடிக்கைகள் மாறிவிட்டன.
தனக்கென தனி இடத்தை பிடித்து ரசிகர்களின் நாயகியாக இருந்த அமலாபால் தனது மதிப்பை தானே குறைத்துக் கொண்டார். இந்த நிலையில் அமலாபால் பாடகர் ஆன பவிந்தர் சிங் என்பவரை காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பவிந்தர் சிங் புகைப்படங்களை வெளியிட்டார்இது தொடர்பான வதந்திகள் பரவி வந்த நிலையில் உண்மையிலேயே திருமணம் செய்து கொண்டாரா இல்லையா என்று தெரியாமலேயே போய்விட்டது இந்த வதந்திக்கு விடை கிடைக்காத நிலையில் தற்போது தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் மூலம் இன்னொரு புதிய ட்விஸ்ட்டை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.
அமலாபாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போஸ்டர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெறிக்க விட்டன. அதனைத் தொடர்ந்து ஜெகத் தேசாய் என்பவர்
“எனது ஜிப்ஸி குயின் ஓகே சொல்லி விட்டார் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மை லவ்”
என்று போஸ்ட் செய்துள்ளார். அமலாபாலின் பிறந்தநாள் விழாவில் ஜெகத் தேசாய் தனது காதலை பிறந்தநாள் பரிசாக வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு அமலாபாலும் சரி என்று கூறி இருவரும் கட்டியணைத்து முத்தமிட்டுக்கொண்டு மோதிரம் மாற்றும் வீடியோவை அமலாபாலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவர்களின் திருமணம் விரைவில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிறந்தநாள் விழாவை நிச்சயதார்த்த விழாவாக மாற்றி வட்டனர் இது தொடர்பான வீடியோக்களும் பேச்சுக்களும் வைரலாகி வருகின்றன..