நடிகை அமலா பாலின் ஆத்திரமான பதிவு!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் அமலாபால். இயக்குனர் ஏ.எல். விஜய்யை விவாகரத்து செய்த பின்னர், பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்தார். ஆனால் ஆடை படத்தில் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நடித்ததால் தமிழ் திரையுலகில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார். இந்நிலையில் அமலாபால் அவரது ஆண் நண்பரை திருமணம் செய்த போட்டோக்கள் இணையதளத்தில் வைரல் ஆனது. அமலாபால் இன்று வரை தன்னுடைய இரண்டாம் திருமணத்தை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நடிகர், நடிகைகள் தங்களது பொழுதுபோக்குகளை சமூகவலைத்தளங்களில் கழிக்கின்றனர். அந்த வகையில் நடிகை அமலாபாலும் பல்வேறு கருத்துக்களையும் அவருடைய புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். அப்படி அவர் எந்த ஒரு புகைப்படத்தையோ அல்லது வீடியோவையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டால் , உடனே நெட்டிசன்கள் அதை சர்ச்சை ஆக்கி வைரல் ஆக்கி விடுகின்றனர் .
பெண்களைப் பற்றி நடிகை அமலாபாலின் பேச்சு
அதனால் ஆத்திரமடைந்த அமலாபால் பெண்களைப் பற்றி சர்ச்சையான கேள்விகளை கேட்கும் ஆண்களுக்கு பதிலடி கருத்தை பதிவிட்டிருக்கிறார். அவர் அந்த பதிவில் கூறியதாவது:- ” ஏன் அனைத்து கேள்விகளும் பெண்களை நோக்கியே கேட்கப்படுகிறது? ஆண்களைப்பற்றி எந்த ஒரு கேள்வியும் கேட்பதில்லை. இவ்வுலகில் எல்லா கேள்விகளும் பெண்களுக்கு மட்டுமே கேட்கப்படுகிறது. காதல், திருமணம், குழந்தைகள் அது மட்டுமில்லாமல் இன்னும் பல கேள்விகள் இதில் அடங்கும். அதுவே கடவுளைப் பற்றியும், வாழ்க்கை பற்றியும், தத்துவத்தைப் பற்றியும் கேட்பதில்லை. இந்தக் கேள்விகளை எல்லாம் ஒரு ஆணிடம் யாரும் கேட்பதில்லை.
ஏனென்றால் பெண்கள் அடிமைதனத்திலும், அவமானத்திலும், பொருளாதாரத்திலும் மற்றவர்களை சார்ந்து இருப்பதால் தான். இவை எல்லாவற்றுக்கும் மேலாக பெண்கள் குழந்தையை பெற்றுக் கொடுப்பவளாக இருப்பதால்தான். பல நூற்றாண்டுகளாகவே பெண்கள் வலியுடனே வாழ்ந்து வருகிறார்கள். ஒரு பெண் கர்ப்பம் ஆனால், அவளால் சாப்பிட கூட முடிவதில்லை. எப்பொழுதுமே வாந்தி எடுத்துக் கொண்டே இருப்பாள். ஒன்பது மாதம் முடிந்து குழந்தையை பெற்றெடுக்கும் போது மறு ஜென்மம் எடுக்கிறாள். அப்படி குழந்தையை பெற்றெடுத்த பிறகு அவளை மீண்டும் கர்ப்பமாக்க தயாராக இருக்கிறான் அவளது கணவன். மக்கள் தொகையை பெருக்கும் தொழிற்சாலையாக தான் ஒரு பெண் கருதப்படுகிறாள். இவை அனைத்திலும் ஒரு ஆணின் செயல்பாடு என்ன? அவளுடைய வலியில் பங்கேற்பதில்லை. 9 மாதங்கள் கஷ்டப்படும் நேரத்தில் உதவி செய்வதில்லை. குழந்தையை பெற்றெடுக்கும் போது அவன் என்ன செய்கிறான்? ஒரு ஆணைப் பொருத்தவரை அவனுடைய காமத்தையும், பாலுணர்வையும் போக்கும் ஒரு பொருளாகத்தான் பெண்ணை எண்ணுகிறான்.
காதல் என்ற வார்த்தை பொய்
இன்னமும்கூட ஒரு பெண்ணிடம் தான் காதலிப்பதாக தான் கூறுகிறான். ஆனால் உண்மையான காதல் இருந்தால் கண்டிப்பாக மக்கள்தொகை பெருகி இருக்காது. காதல் என்ற வார்த்தை பொய்யான வார்த்தையாக தான் இருக்கிறது. என்னை பொருத்தவரை கிட்டத்தட்ட ஒரு வளர்ப்புப் பிராணியாக தான் பெண்கள் நடத்தப்படுகிறார்கள். இவ்வாறு அமலாபால் பதிவிட்டிருக்கிறார். அமலாபாலை பற்றிய உங்களுடைய கருத்துக்களை பதிவு பண்ணுங்கள். நன்றி!