Mark Antony in OTT: ஓடிடி தளத்தில் மார்க் ஆண்டனி விஷாலின் ரசிகர்கள் கொண்டாட்டம்
மார்க் ஆண்டனி ஒரு பார்வை
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
- இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார்.
- மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
- ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

மார்க் ஆண்டனி விஷாலுக்கு ஒரு புதுவித அனுபவமாக இருக்கும்.இதுவரை அவர் நடிக்காத கதாபாத்திரத்தில் முற்றிலும் மாறுபட்ட கதைக் களத்துடன் அமைந்த திரைப்படமாக உள்ளது. எனவே விஷாலின் ரசிகர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும்.
ஓடிடி இல் மார்க் ஆண்டனி
கடந்த மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வந்தனர்.இந்நிலையில், ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் வரும் 13ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திரையரங்குகளில் வெற்றி கொண்டாட்டமாக இருந்த மார்க் ஆண்டனி ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.