சீயான் 60 பட குழுவில் இணையும் புது நபர் யார்?
சியான் விக்ரமின் 60வது படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.
கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலே ஒரு தனி கெத்து அவங்களோட சியான் விக்ரம் இணைவது கெத்தோ கெத்து.
அண்மையில் பெண்குயின் படத்தை தயாரித்த கார்த்திக் சுப்புராஜ் ஊரடங்கு முடிவதற்காக காத்திருக்கிறார். தனுஷை கதாநாயகனாக கொண்ட ஜகமே தந்திரம் படம் இவரால் இயக்கப்பட்டு இந்த ஆண்டு வெளியிட உள்ளது. பல மாஸ் படங்களை கொடுத்த கார்த்திக் சுப்புராஜின் ஹிட் லிஸ்டில் இதுவும் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓ பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை…
மனதை கொள்ளை கொண்ட சியான் விக்ரம் தனித்துவமான பல படங்கள் நடித்து பட்டையைக் கிளப்பியுள்ளார். சமீபத்தில் இருமுகன் படத்தில் லவ் என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்தார் என்பதைவிட வாழ்ந்தார் என்று சொல்வது மிகையாகாது. பல எதிர்பார்ப்புகளுடன் கடாரம் கொண்டான் படம் வர ஏமாற்றத்தை அளித்தது.
சியான் விக்ரமின் படம் ரிலீஸுக்கா அவரின் ரசிகர்கள் தன் தலைவரைப் போன்று காட்சி அளிக்க வேண்டும் என ஸ்டைல் செய்து கொண்டால் அதற்குள் விக்ரம் அடுத்த படத்திற்காக ஸ்டைலை மாற்றி விடுவார். ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தரும் என பலர் நகைச்சுவையாக வருத்தப்பட்டுள்ளனர்.
சியானின் மகனான துருவ் விக்ரம் தனது முதல் படத்தை தந்தார். அர்ஜுன் ரெட்டி என்னும் தெலுங்கு படத்தின் தமிழாக்கமான ஆதித்யா வர்மாவில் நடித்த துருவ் ‘தமிழாக்க படமாக இருந்தாலும் தனித்துவமாக இருந்ததாகவும் முதல் முறை என்ற சூவடும் இல்லாமல் நடித்தார்’ என பாராட்டுக்கள் குவிந்தன.
திரையுலகு என்று வந்தவுடன் கதாநாயக போட்டியில் தந்தையும் மகனும் இருக்கின்றனர்.மகன் வந்த பிறகும் தந்தைக்கு பவுஸ் குறையவில்லை என்பதுதான் உண்மை. மகன் முதல் படத்தை தர தந்தை 60வது படம் நடிக்கிறார்.
சியான் 60இல் தந்தை மகன் ஜோடி உள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சீயான் விக்ரமும் துரு விக்ரமும் இணைந்து நடிக்கின்றனர்.
கார்த்திக் சுப்புராஜின் பல படங்கலில் ஒளிப்பதிவாளராக இருக்கும் ஷெராஸ் கிருஷ்ணா சியான் 60இல் இணைகிறார். இவர் ஒளிப்பதிவாளராக இருந்த சில படங்கள் அவள், ஜில் ஜங் ஜக், ராக்கி மற்றும் கூடிய விரைவில் ரிலீஸாகப் போகும் ஜகமே தந்திரம்.
தனுஷ் ரசிகர்களே ஜகமே தந்திரம் காத்திருங்கள். சியான் ரசிகர்களே சியான் அறுபதாவது படத்திற்காக காத்திருங்கள். ஆனால் கார்த்திக் சுப்புராஜ் இயக்குனரின் ரசிகராக இருப்பின் இரண்டிற்கும் காத்திருங்கள்.
நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.