சென்னை மிக்ஜாம் புயலால் வாடும் மக்களுக்கு நடிகர் விஜய் செயல்
மிக்ஜாம் புயலால் மூழ்கும் தலைநகரம்
தலைநகர் சென்னையே இப்பொழுது மிக்ஜாம்புயலால் மூழ்கிவிட்டது. மக்கள் மழை வெள்ளத்தில் தத்தளித்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். தங்குவதற்கு கூட இடமில்லாமல் வாடி வருகின்றனர் இன்றைய தமிழக அரசு முன்பெல்லாம் மழை பெய்தால் சென்னை மக்கள் பயந்து நடுங்குவார்கள் ஆனால் இப்பொழுது அந்த பேச்சுக்கு இடமில்லை மழை வந்தால் மகிழ்ச்சி வெள்ளத்தில் தான் குதிப்பார்கள் என மாறி மாறி தங்களின் பெருமையை பேசி வந்தனர். ஆனால் இப்பொழுது அவர்கள் பேசியதற்கு அப்படியே எதிராக நடந்து கொண்டு உள்ளது.
பாதித்த மக்களுக்கு உதவும் உள்ளங்கள்
இவ்வாறு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொழிலதிபர்கள் சினிமா நடிகர் நடிகைகள் என அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். முதலமைச்சரின் நிவாரண திட்டத்திற்கு தங்களால் முடிந்த பணத்தை வழங்குவது பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரடியாக சென்று பசியால் வாடும் மக்களுக்கு உணவு வழங்குவது வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மக்களை காப்பாற்றுவது என தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர் சின்னத்திரை நடிகர்கள் கூட உதவி புரிந்து வருகின்றனர்.
கைகோர்ப்போம் துயர் துடிப்போம் – நடிகர் விஜய் மிக்ஜாம் புயல் எதிரொலி
இந்நிலையில் நடிகர் விஜய் இவ்வளவு நாள் எதுவும் பேசாமல் இப்பொழுது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவு இன்றி மழை வெள்ளத்தால் தவித்து வருகின்றனர். இன்னும் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட பகுதிகளிலிருந்து தங்களை காப்பாற்றுமாறு சமூக வலைத்தளங்களில் குரல்கள் வந்து கொண்டே உள்ளன. எனவே இந்த நேரத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கும் பணிகள் தன்னார்வலர்களாக மாறி நம்மால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்ய வேண்டும் என சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார் கைகோர்ப்போம் துயர் துடைப்போம் என நடிகர் விஜய் கூறியுள்ளார்.
ஆனால் இவரின் இந்த கருத்திற்கு மக்கள் அனைவரும் இவ்வளவு நாள் எங்கு சென்றீர்கள் நாங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு வருகிறோம் ஆனால் உங்கள் பக்கத்தில் இருந்து எந்த உதவியும் எங்களுக்கு கிடைக்கவில்லை ஆனால் இப்பொழுது வந்து உதவ வேண்டும் என்று பேசுகிறீர்களே என வேதனையுடன் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.
முன்னணி பிரபல நடிகர்கள் தொழிலதிபர்கள் அனைவரும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் மக்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும் உங்களால் முடிந்த பண உதவிகளையும் அல்லது உணவு உடை என ஏதாவது ஒன்றை நீங்கள் செய்தால் அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.