SK and D.Imman viral fight :என்னாச்சு சிவகார்த்திகேயனுக்கும் இசையமைப்பாளர் இமானுக்கும் ஏன் இந்த விரோதம்
சிவகார்த்திகேயன் ஏன் இந்த முடிவினை எடுத்தார். இமான் இனிமேல் படம் சேர்ந்து செய்ய முடியாததற்கு காரணம் என்ன, கோலிவுட்டில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத வெற்றி இசை அமைப்பாளர்களில் முக்கியமானவர் இமான் ஆவார். அவருடைய படங்களில் வரும் இசைகள் முக்கிய இடத்தினை பெற்று அனைவரது மனதிலும் முணுமுணுக்கப்படுகின்றது. எவர்கிரீன் பாடல்களாகவும் அமைந்து விடுகின்றது. அப்படிப்பட்டவர் சிவகார்த்திகேயன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் தனது இசையால் சிவகார்த்திகேயன் வளர முக்கிய காரணமாக இருந்தவர் இமான் ஆவார். இமான் சிவகார்த்திகேயனை முதன்முதலாக பாடவும் வைத்தார். இமான் இசையமைப்பில் சிவகார்த்திகேயன் வெற்றி கூட்டணி சிறப்பாக இருந்தது.
மன்னிக்கலாம் ஆனால் துரோகத்தை மறக்க முடியாது
இப்படி இருந்தும் இமான் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்து விட்டதாக ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்திருக்கின்றார். இந்த ஜென்மத்தில் இனி சிவகார்த்திகேயனுடன் படம் செய்வது கிடையாது மன்னிக்கலாம் ஆனால் அவர் செய்த துரோகத்தை மறக்க முடியாது என்பதை தெரிவித்து இருக்கின்றார். சிவகார்த்திகேயன் அனைவரிடமும் நட்பெயருடன் இருப்பவர் ஆனால் இங்கு என்ன ஆச்சு என்று யாருக்கும் தெரியாது. ஆனால் இமான் இதனை நான் வெளிப்படுத்தாததற்கு காரணம் குழந்தைகள் நலன் கருதியே இதனை நான் வெளிப்படுத்தவில்லை என்றும் தெரிவித்து இருக்கின்றார்.
அப்படி என்னப்பா செய்தீர்கள் என்று சமூக வலைதளங்களில் சிவகார்த்திகேயன் இமான் பேச்சுக்கள் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றன. சிவகார்த்திகேயனுக்கும் இது குறித்து தெரிந்திருக்கும் என்று தகவல்கள் கிடைக்கின்றது. மன்னிப்பை கேட்கலாம் ஆனால் துரோகம் செய்து அவர்களுடன் பழையபடி வெள்ளந்தியாக இசையமைப்பது என்பது எப்படி முடியும். மேலும் அடுத்த ஜென்மத்தில் இதுபோல் வாய்ப்பு இருந்தால் பார்க்கலாம் என்று இமான் தெரிவித்திருக்கின்றார்.
வைரலாகும் இமான் பேச்சு
இதுவரை இமான் யாரையும் தவறு சரி என்று சொல்லியது கிடையாது இந்த முறை இவ்வாறு தெரிவிக்க என்ன காரணம் என்று தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்படுகின்றது சிவகார்த்திகேயன் அனைவரது இடத்திலும் நல்ல பெயர் பெற்றிருக்கின்றார். இருப்பினும் தெரிந்தும் தெரியாமலும் இந்த தவறை செய்திருக்கிறார் என்ற பேச்சும் இமானிடமிருந்து வருகின்றது. அவருக்கு துரோகம் செய்தவர்களும் இவரும் முக்கியமானவர் என்று வேறு இமான் தெரிவித்திருக்கின்றார்.
ஆகையால் இது குறித்த அடுத்த அப்டேட்டுகள் என்னவாக இருக்கும் என்று தமிழ் சினிமாவில் இப்போது பேசப்படுகின்றது சிவகார்த்திகேயன் வெளியில் வெள்ளந்தியாக பேசுகின்றார் , ஆனால் அது அவருடைய சுயமாக இருக்குமா என்ற கேள்வியும் தற்போது ஒரு சிலர் எழுப்பி வருகின்றனர் .