சினிமாசெய்திகள்தமிழகம்

சிறந்த அறிமுக ஹீரோ விருதை பெறும் நாய் சேகர் நாயகர்

மதராசபட்டினம், அண்ணாத்த, பைரவா ரெமோ போன்ற பல படங்களில் காமெடி நடிகராக நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சதீஷ் இவர் காமெடிக்கு என்று பல ரசிகர்கள் குவிந்து உள்ளனர். எதிர்நீச்சல் ரெமோ போன்ற பல படங்களில் சிவகார்த்திகேயனுடன் காமெடி நடிகராக நடித்து அனைவர் மனதிலும் இடம் பிடித்தார் இவருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் காம்பினேஷன் சூப்பராக இருக்கும்

. இவர் திரைப்படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையில் கூட மிகவும் எதார்த்தமான கேரக்டர் மற்றவர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே பேசுபவர். நையாண்டி தங்க மகன் போன்ற படங்களில் தனுஷ் உடனும் நடித்திருக்கிறார் இப்படி பல நடிகர்களுடன் நடித்த இவர் அனைவருக்கும் நல்ல பேரை புகழையுமே பெற்று வந்துள்ளார். இவ்வாறு பல படங்களில் காமெடி நடிகராக நண்பராக நடித்து வந்த இவர் நாய் சேகர் என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார் இந்த படம் நல்ல வரவேற்பை அனைவரும் மத்தியிலும் பெற்றது. இந்த திரைப்படம் காமெடியும் எதார்த்தமும் கலந்த திரைப்படமாக அமைந்தது. நாய் சேகர் என்பது காமெடி ஜாம்பவான் வடிவேலுவின் ஒரு டயலாக் என்பதால் ஆரம்பத்தில் இந்த பெயரை வைப்பதற்கு எதிர்ப்பு இருந்தது ஆனால் இப்பொழுது இந்த பெயர் தான் கரெக்டாக இருக்கும் என்று பட குழுவினர் தெரிவித்து நாய் சேகர் என்ற பெயரையே வைத்தனர். இதனைத் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்து கொண்டு உள்ளது.

இதற்கிடையில் சிறந்த அறிமுக நாயகருக்கான விருதை ஒரு தனியார் நிறுவனம் சதீஷிற்கு வழங்கி உள்ளது இவர் மென்மேலும் பல விருதுகளை பெற்று மக்களை மகிழ்வித்து அவரும் முன்னேற்ற பாதையை அடைந்து பல வெற்றிகளை பெற வேண்டும் என்று அவரது ரசிகர்கள் மனதார வாழ்த்து கூறி வருகின்றனர். அவருக்கு அளிக்கப்பட்ட விருதின் புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் அவருடன் அவரது செல்ல மகளும் உடன் இருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க ; சியானுக்கு ஜோடியாகும் சில்மிஷ நடிகை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *