நடிகர் ராஜ்கிரன் ஸ்டைல் ருசியான எலும்பு குழம்பு வீட்டிலேயே…
அசைவ பிரியர்களுக்கு அறுசுவை விருந்தாக இருக்கும் ஒரு ரெசிபியை எவ்வாறு வீட்டிலேயே மிக எளிய முறையில் செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். அசைவ பிரியர்கள் என்னதான் மட்டன் ,சிக்கன் , மீன் என்ன சாப்பிட்டாலும் அவர்களுக்கு மன திருப்தியுடன் சாப்பிட்ட நிகழ்வு ஒரு ரெசிபியில் உள்ளது. இந்த ரெசிபிக்கு நமது பிரபல திரைப்பட நடிகர் பேமஸ் ஆனவர். ஆம் நமது திரைப்பட நடிகர் ராஜ்கிரண் எலும்பு கடிக்கும் ஸ்டைலை யாருக்கும் பிடிக்காமல் இருக்காது அவரைப் பார்த்து எலும்பிற்கு அடிமையானவர்கள் பல பேர் உள்ளனர்.
எலும்பு பெரியவர்களுக்கு மட்டுமல்ல குட்டீஸ்களுக்கு கூட மிகப் பிடித்த உணவாக உள்ளது. எலும்பை ஸ்டைலாக கடித்து அதில் இருக்கும் சத்துக்களை உறிஞ்செடுக்கும் விதமே சாப்பிடுவதற்கு ஒரு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. நாம் சிக்கன் மட்டன் சாப்பிடுவதை விட எலும்பில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. பல பேர் விரும்பி சாப்பிடும் எலும்பு குழம்பு வீட்டிலேயே நீ எளிய முறையில் எவ்வாறு மிக ருசியாக சமைக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் இந்த பதிவு உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – 20
பச்சை மிளகாய் – 5
நறுக்கிய இஞ்சி – 1 துண்டு
நசுக்கிய பூண்டு – 5 பல்
மட்டன் எலும்பு – 1/2 கிலோ
தக்காளி – 2
அரைத்த தேங்காய்- அரை கப்
மல்லித் தூள் – 4 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
கசகசா – 1/2 ஸ்பூன்
பட்டை – 1
கிராம்பு – 4
எண்ணெய் – தேவைக்கு ஏற்ப
மிளகாய்த் தூள் – 1/2 ஸ்பூன்
மட்டன் மசாலா – 1/2 ஸ்பூன்
எலும்பு குழம்பு செய்முறை
முதலில் மிக்ஸியில் நாம் எடுத்து வைத்த மிளகு, சீரகம் , பட்டை, கிராம்பு, ஆகியவற்றை சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு ஒரு குக்கரில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் நாம் நீளமாக நறுக்கி வைத்த சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அதில் நாம் பச்சை மிளகாய் மற்றும் அரைத்து வைத்த இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின்பு நாம் நறுக்கி வைத்த தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும் அதில் சிறிதளவு தக்காளி வதங்குவதற்கு ஏற்ப உப்பு சேர்த்து கொள்ள வேண்டும். அதன் பின்பு நாம் அரைத்து வைத்த மிளகு சீரகம் கிராம்பு பட்டை சேர்ந்த பொடியை போட்டு சற்று கிளற வேண்டும். அதன் பின்பு சுத்தம் செய்து வைத்த எலும்பு துண்டுகளை சேர்த்து கிளறி விட வேண்டும்.
எலும்பு துண்டுகளை ஒரு 15 நிமிடம் நன்கு வேக விட வேண்டும். அதன் பின்பு மல்லித்தூள் மற்றும் மிளகாய்த்தூள்,சிறிது அளவு மட்டன் மசாலா சேர்த்து கிளறவும். பின்பு ஒரு மிக்ஸியில் தேங்காய் மற்றும் அதனுடன் பச்சை மிளகாய் ஒன்று சோம்பு மற்றும் கசகசா சிறிதளவு சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
எலும்பு துண்டுகள் நன்கு வேகவைத்த பின்பு அதனுடன் நாம் அரைத்து வைத்த தேங்காயை ஊற்றி அது தேவையான அளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளரி விட வேண்டும். இதனுடன் கொத்தமல்லி இலை நறுக்கி சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறியதும் குக்கரை மூடி விடவும் நான்கு அல்லது ஐந்து விசில் வரும் வரை விட்டு ஏறத்தாழ 25 நிமிடம் அடுப்பை அணைத்துவிட்டு இறக்கி விடவும்.
அவ்வளவுதான் சூடான மிக மிக ருசியான எலும்பு குழம்பு தயாராகி விட்டது இனி வீட்டிலேயே எளிய முறையில் எலும்பு குழம்பு செய்து உங்கள் வீட்டில் உள்ள ஆண்களை உங்கள் சமையலுக்கு அடிமையாக்கி விடுங்கள்.