சினிமாசின்னத்திரைசெய்திகள்தமிழகம்

தனது காதலனை அறிமுகப்படுத்திய பாவனி ரெட்டி அதிர்ச்சியில் அமீர்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரட்டைவால் குருவி சின்னத்தம்பி போன்ற பேமஸ் சீரியலில் ஹீரோயினியாக நடித்து கலக்கி வந்தவர் தான் பாவனி ரெட்டி. இவர் நடித்த இரண்டு சீரியலுமே சூப்பர் ஹிட் அடித்து டிஆர்பி எகிறிது. இவர் தமிழ் சீரியல்களில் மட்டும் இன்றி தெலுங்கிலும் அதிகமாக நடித்து வந்தார் ரெட்டைவால் குருவி சின்னத்தம்பி ஆகிய சீரியல்களுக்கு பின்னர் பாவனி ரெட்டி விஜய் தொலைக்காட்சியில் பார்க்கவே முடியவில்லை. நீண்ட காலங்களுக்கு பிறகு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக வந்தார். இதன் மூலம் மீண்டும் மக்கள் மனதில் தோன்றினார்.

இவரின் திருமண வாழ்க்கையைப் பற்றி நாம் அனைவரும் அணிந்திருப்போம் சீரியலில் நடிக்கும் போது காதலித்து தனது அன்பு காதலனை கரம் பிடித்தார். இவர்களது திருமண வாழ்க்கை மிகவும் அழகாக இருந்தது.இந்த நிலையில் அவரது காதல் கணவர் இறந்து விட்டார். தனது திருமண வாழ்க்கை குறித்தும் தனது அன்பு கணவர் இறந்தது குறித்தும் இவர் பிக் பாஸ் ஷோ வில் சொல்லியிருப்பார். இதன் பின் பாவினிக்கு மக்களிடம் அதிக வரவேற்பு கிடைத்தது. பாவனி ரெட்டி இருந்த பிக் பாஸ் ஷோவில் வயல் கார்டு ரவுண்டில் என்ட்ரி கொடுத்த டான்ஸ் மாஸ்டர் அமீர் பாவணியுடன் நல்ல நண்பராக இருந்தார் பிறகு பாவனி மீது கொண்ட அதீத காதலை அமீர் வெளிப்படுத்தினார்.

மேலும் படிக்க : சீரியல் நடிகர் நந்தகாேபால் பற்றிய சுவாரசியமான தகவல்கள்!

ஆனால் ஆரம்பத்தில் பாவனி இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. பின்பு பிக்பாஸ் ஜோடிகளில் மிக அழகான ஜோடியாக இருவரும் நடனமாட பங்கேற்ற இருந்தனர். இந்நிலையில் அமீருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பாவனி ஒருவழியாக தனது காதலை ஒப்புக்கொண்டார். மேலும் அமீருடன் மிக நெருக்கமாக உள்ள புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார். மேலும் வாழ்த்து கூறிய போது Love U da என்று மென்ஷன் செய்துள்ளார் எனவே அவர் காதலிப்பது உறுதியானது.

மேலும் படிக்க : சிவப்பு உடையில் கலக்கும் பீஸ்ட பட நடிகை….!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *