Jallikattu bulls

Vijaykanth death: உடல் நலக்குறைவால் காலமான கேப்டன் விஜயகாந்த்

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இன்று காலை 28.12.2023 நம்மை விட்டு பிரிந்து விட்டார்.

சினிமாவிலும் மக்கள் மனதிலும் உச்சத்தை தொட்ட கேப்டன்

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சினிமா துறையில் மிகப்பெரும் உச்சத்தில் இருந்த நடிகர் ஆவார் சொக்கத்தங்கம், சின்ன கவுண்டர், கேப்டன்,வைதேகி காத்திருந்தாள் போன்று தனது 28 வயதிலிருந்து சினிமா துறைக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த மாமனிதர் பின்பு அரசியலுக்கு வந்து மக்களுக்கு தொண்டு செய்வதற்காகவே தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்தவர்.

அரசியலுக்கு வந்த தன்னிகரில்லாத தலைவர் நமது கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பல தொண்டுகளை மக்களுக்காக செய்துள்ளார். முதன் முதலில் ஆம்புலன்ஸ் சேவையை கொண்டு வந்தவர் நமது கேப்டன். சினிமா வாழ்க்கையில் எப்படி உச்சத்தை தொட்டாரோ அதேபோன்று அரசியல் வாழ்விலும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து மக்கள் மனதில் உச்சத்தில் நின்ற மாமனிதர் ஆவார்.

உடல் நலக்குறைவால் காலமான கேப்டன் விஜயகாந்த்

மாபெரும் சகாப்தம் கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை நுரையீரல் அலர்ஜி காரணமாக மூச்சு விட சிரமப்பட்ட விஜயகாந்த் அவர்கள் நம்மை விட்டு விண்ணுலகம் சென்று விட்டார்.

விஜயகாந்த் இவ்வுலக விட்டு சென்றாலும் அவரது நினைவும் அவர் செய்த உதவிகளும் இந்த மண்ணில் மக்கள் பிறவி இருக்கும் வரை வாழ்ந்து கொண்டே தான் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *