அடடே நம்ம நாட்டாமை சரத்குமார் பாருங்க
நடிகர் தயாரிப்பாளர் இயக்குனர், பாடகர், கதாசிரியர், அரசியல்வாதி, பத்திரிக்கையாளர், முன்னாள் பாடிபில்டர் மற்றும் தமிழ் திரை சங்கத்தின் முன்னாள் தலைவர் என பல அறிமுக பட்டியலை வைத்து இருக்கும் நபரை யூகித்திருப்பீர்களா!
சரத்குமார்
14 ஜூலை 1954 இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் பிறந்தவர் சரத்குமார். பேப்பர் போடும் பையனாகவும் பயணத்தைத் துவங்கி பத்திரிக்கையில் ரிப்போர்ட்டராக மாறி பெங்களூரில் தினகரன் அலுவலகத்தை நிறுவி பணிபுரிந்து வர சென்னையில் அதை விரிவுபடுத்த அழைக்கப்பட்டார். இன்றுவரை பத்திரிகையாளராக இருப்பது பிடிக்கும் என்று மீடியா வாய்ஸ் என்ற வாராந்திர இதழை நிறுவி செய்தி தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.
1980ல் திரையுலகில் நடிகராக சரத்குமாரை எல்லோருக்கும் தெரியும் பிற்காலத்தில் அவர் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் கதாசிரியராகும் மற்றும் சில பாடல்களை பாடியும் உள்ளார். 1990ல் அரசியலில் காலடி எடுத்து வைக்க கூட்டணியில் கட்சிகளோடு இருந்து வர 2007 அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை தனித்துவமாக துவங்கினார்.
சமீபத்தில் இவரின் பிறந்தநாளை குடும்பத்தினருடன் வீட்டிலேயே கொண்டாடியுள்ளார். 66 வயது என்று சொன்னால் நம்பமுடியாத அளவிற்கு தன்னை ஹெல்தியா ஃபிட்டாக வைத்துள்ளார் சரத்குமார். முன்னாள் பாடி பில்டராக இருந்தாலும் தற்போதும் இந்த ஊரடங்கு காலகட்டத்திலும் தன் உடல் கட்டை சீராக சூப்பராக தயாரான நிலையில் வைத்துள்ளார். அவர் செய்யும் ஜிம் உடற்பயிற்சியை கண்டு மக்களும் சரியாக முயற்சிக்கலாம்.