Sleeping time : மனிதனின் வயதிற்கு ஏற்ப இவ்வளவு மணி நேரம் தூங்கினால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும்?
ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது ஒரு மனிதன் சரியாக தூங்காமல் இருப்பதால் அவன் வாழ்வில் எவ்வளவு பிரச்சனைகளை சந்திக்கிறான், தூக்கம் கெடுவதால் உடல் சோர்வு, தலைவலி ஞாபக மறதி, எந்த செயலிலும் ஆர்வமின்மை, அலட்சியம், உடலில் தூக்கம் கெடுவதால் ஏற்படும் நோய்கள், பசியின்மை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
ஒவ்வொரு வயதினரும் இவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும் என்று உள்ளது.அவ்வாறு தூங்கினால் மட்டுமே அவனது உடல் ஆரோக்கியமாக இருக்கும் செய்யும் செயலில் தெளிவு இருக்கும். ஒரு குறிப்பிட்ட வயதினர் இவ்வளவு மணி நேரம்தான் தூங்க வேண்டும் என்ற அளவு உள்ளது அதற்கு குறைவாக தூங்கினாலும் அல்லது அதற்கு மேல் தூங்கினாலும் அவன் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் எனவே யார் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
# 1 வயது – ஒரு வயது உள்ள குழந்தைகள் 12 முதல் 17 மணி நேரங்கள் ஒரு நாளைக்கு மிக அவசியமாகும். எனவே குழந்தைகள் நீண்ட நேரம் தூங்குகிறார்கள் என்று அச்சம் இனி வேண்டாம்.
. # 2 முதல் 5 வயது – இரண்டு முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஒரு நாளில் 10 முதல் 14 மணி நேரம் தூங்குவது மிக அவசியம்.
. # 5 முதல் 13 வயது – ஐந்து முதல் 13 வயதிற்கு உட்பட்டவர்கள் ஒரு நாளில் 9 முதல் 11 மணி நேரங்கள் தூங்குவது மிக அவசியமாகிறது எனவே குழந்தைகள் அதிகமாக தூங்குகிறார்கள் என்று நினைக்காதீர்கள்.
. # 14 முதல் 17 வயது – 14 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு நாளில் 8 முதல் 10 மணி நேரங்கள் வரை தூங்குவது மிக அவசியம். இந்த வயதில் பொதுத்தேர்வு எதிர்கொள்ளும் மாணவர்கள் மிக அதிகம் இருப்பார்கள். அவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக தூக்கத்தை கெடுத்து படித்தால் நீங்கள் எவ்வளவு படித்தாலும் அது மனதில் நிற்காது. எனவே நீங்கள் மேலே குறிப்பிட்ட நேரம் தூங்குவது மிக அவசியம்.
. # 18 முதல் 64 வயது – 18 முதல் 64 வயது வரை உள்ள மனிதர்கள் அனைவரும் ஒரு நாளில் 7 முதல் 9 மணி நேரங்கள் தூங்குவது மிக அவசியமாகிறது. நீங்கள் என்னதான் வேலையில் இருந்தாலும் உங்களுக்கான தூக்க நேரத்தை எதற்காகவும் மாற்றிக் கொள்ளாதீர்கள். இப்பொழுதுதான் உங்கள் வாழ்வில் உங்களுக்கான லட்சியத்தை அடைய புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
. # 65 வயதிற்கு மேல் உள்ளவர்கள் – 65 வயதிற்கு மேல் உள்ள அனைவரும் ஒரு நாளில் குறைந்த பட்சம் 7 மணி நேரம் தூங்குவது அவசியம் எனவே பெரியவர்கள் தூக்கம் வரவில்லை என்று முழித்துக் கொண்டே இருப்பதால் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மேலும் தீங்காக அமையும். எனவே குறைந்த பட்சம் ஒரு நாளில் ஏழு மணி நேரம் தூங்குங்கள்.