மருத்துவம்

நோய் தீர தொட்டால் சுருங்கியை தொடலாமா…

தொட்டால் சுருங்கி செடியை பலபேர் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த செடியின் இலையை தொடர்ந்து ஒரு மண்டலம் தொட்டு வந்தாலே நோய் தீரும் என்று சித்தர்கள் குறிப்பிட்டு உள்ளனர். இந்த செடி நகர புறங்களில் கிடைக்க வாய்ப்பில்லை. கிராம புறங்களில் அதிகம் வளர்ந்து இருக்கும். இந்த இலைகள் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கின்றன. பச்சையாக வேண்டும் என்றால் கிராமங்களுக்கு போய்தான் கொண்டு வர வேண்டும்.

அபூர்வமான மூலிகை செடி

தொட்டால் சுருங்கி ஒரு அபூர்வமான மூலிகை செடி ஆகும். மலை பகுதிகளிலும், தரிசு நிலங்களிலும், காடுகளிலும் தானாக வளர்ந்து கிடக்கும். இந்த செடியை தொட்டாலே தானாக சுருங்கி கொள்ளும். இது தொடு உணர்வு மற்றும் காந்த தன்மை கொண்ட மூலிகை செடி. யுனானி, ஆயுர்வேத மருந்தாக இந்த செடி பயன்படுத்தபடுகிறது.

நோய்கள் குணமாக

இந்த செடி இலையை பயன்படுத்துவதால் பல நோய்கள் குணமாகின்றன. மூலம், ஆண்மை குறைவு, வெயிலினால் ஏற்படும் சூடு பிடிப்பு, சிறுநீர் கடுப்பு, வயிற்று புண், வயிற்று கடுப்பு, பவுத்திரம் உள்ளவர்கள், கல் அடைப்பு, இடுப்பு வலி, கை, கால் மூட்டு வீக்கம், தோல் வியாதிகள் குழந்தை பேறு பிரச்னை போன்ற நோய்களை குணப்படுத்தும். இதை எப்படி உண்பதால் இந்த பிரச்சனைகள் தீரும் கீழே பார்ப்போம்.

நன்மைகளை கொண்டது

இதன் இலையை அரைத்து எலுமிச்சை அளவிற்கு மோரில் கலந்து மூன்று நாட்கள் குடிப்பதால் வயிற்று புண், வயிற்று கடுப்பு சரியாகும். வெயிலில் அலைந்து வேலை பார்ப்பவர்கள் இதன் இலையை அரைத்து பத்து கிராம் அளவிற்கு தயிரில் கலந்து குடிப்பதால் சிறுநீர் பிரச்னை, சூடு பிடிப்பு சரி ஆகும். இதன் இலையை அரைத்து பதினைந்து கிராம் அளவிற்கு பாலில் கலந்து பதினைந்து நாட்கள் குடிப்பதால் ஆண்மை குறைவு, வயிற்று புண், மூலம் குணமாகும்.

இந்த செடியின் வேரை பஞ்சு போல உருட்டி இதில் அரை லிட்டர் தண்ணிர் விட்டு பானையில் காச்சி சண்ட விட்டு இறக்கி விடவும். இதை ஆற வைத்து ஐம்பது மிலி தினமும் மூன்று வேலை குடித்து வர கல்லடைப்பு, நீர் அடைப்பு பிரச்சனை குறையும். சீறுநீர் பிரியும். பவுத்திர மூல ரணத்திற்கு இதன் இலைசாறை தடவி வர ரணம் குறையும். கை, கால் மூட்டு வீக்கம் குணமாக இதன் இலையை அரைத்து கட்ட வீக்கம் குறையும்.

இதன் இலையை நீரில் போட்டு சூடு செய்து அந்த நீரை இடுப்பில் ஒத்தடம் குடுத்து வர இடுப்பு வலி குறையும். மூலம், பௌத்ர பிரச்சனைக்கு இதன் இலைகள், வேரை போடி செய்து பசும்பாலில் கலந்து காலை வெறும் வயிற்றில் குடித்து வரலாம். இவ்வளவு நன்மைகளை கொண்ட இந்த இலையை எங்கு பார்த்தாலும் விடாதீர்கள் இதன் பயனை தெரிந்து கொண்ட நீங்களும் பிறருக்கு பகிருங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *