நோய்கள் விலக இதனை படியுங்கள்
வளமான வாழ்க்கை என்பது நாம் சம்பாதித்து சேமித்த சொத்தில் இல்லை நம் உடல் ஆரோக்கியத்தில் உள்ளது என்பதை நாம் அறிய வேண்டும். பணத்திற்காக ஓடித்திரிந்து உடலை இழந்து பின்பு உடலை மீட்க மீண்டும் பணத்தை செலவு செய்வது வாழ்க்கையாகுமா!
வேலை மற்றும் சுய வாழ்க்கை இரண்டிற்கும் தகுந்த நேரத்தை ஒதுக்கி நம் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து வளமாக வாழ்வதே நம் லட்சியமாக கொள்ள வேண்டும். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க நாம் அன்றாட வாழ்க்கையின் அடிப்படையான ஆன்மீகத்தை அடையுவோம்.
அபிராமி அந்தாதியின் இருபத்தி நான்காம் பாடல் நோய்களை விலக்கி அபிராமி அன்னை நம்மை காக்கிறார். அனுதினமும் இதனைப் பாடி அனைத்து விதமான நோய்களிலிருந்தும் நம்மை காக்க அவள் அருள்புரிகிறார்.
24. நோய்கள் விலக
மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த
அணியே! அணியும் அணிக்கு அழகே! அணுகாதவர்க்குப்
பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே!
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே.
விளக்கவுரை
அபிராமித்தாயே! மணியாக விளங்குபவளே! அம் மணியில் உண்டாகும் ஒளியாகவும் விளங்குபவளே! ஒளி பொருந்திய நவமணிகளால் இழைக்கப்பட்ட அணியாகவும், அந்த அணிக்கு அழகாகவும் திகழ்பவளே! நின்னை அணுகாதவர்க்குப் பிணியென நிற்பவளே! நின்னை அண்டிவரும் பாபாத்துமாக்களின் பிணிக்கு மருந்தாகவும் நிற்பவளே! தேவர்களுக்கு பெரும் விருந்தாய்த் தோன்றும் அன்னையே! நின் அழகிய தாமரை போலுள்ள சேவடியைப் பணிந்த பின்னே,வேறொரு தெய்வத்தை வணங்க மனத்தாலும் நினையேன்.