மகிழ்ச்சியாக வாழ தினமும் இதனை படியுங்கள்
மகிழ்ச்சி!
வாழ்க்கையின் அத்தியாவசியமான ஒன்றாக திகழ்வது மகிழ்ச்சி. மகிழ்ச்சி இல்லையெனில் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்ததன் சுற்றியோ பலனும் இருப்பதை நாம் உணர மாட்டோம். எந்த ஒரு செயலையும் மகிழ்ச்சியுடன் செய்தாலே அது முழுமையடையும்.
யார் செய்தாலும் எதைச் செய்தாலும் மகிழ்வோடு செய்தால் அந்த மகிழ்ச்சி மற்றவருக்கும் பகிரும். அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் இருக்க அபிராமி அந்தாதியின் இருபத்திமூன்றாவது பாடலைப் படியுங்கள்.
23. எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க
கொள்ளேன் மனத்தில் நின்கோலம் அல்லாது; என்பர் கூட்டம் தன்னை விள்ளேன்; பரசமயம் விரும்பேன்; வியன் மூவுலகுக்கு உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த கள்ளே! களிக்கும் களியே அளிய என் கண்மணியே. மேலும் படிக்க : ஆடி அம்மாவாசையில் முன்னோர்களை வழிபடும் முறைகள்!,,
விளக்கவுரை
அபிராமித் தாயே! நின்னுடைய கோலமில்லாத வேறொரு தெய்வத்தை மனத்தில் கொள்ளேன். நின்னுடைய அடியார்கள் கூட்டத்தைப் பகைத்துக் கொள்ள மாட்டேன். உன்னையன்றி பிற சமயங்களை விரும்ப மாட்டேன். மூன்றுலகங்கட்கு (மண், விண், பாதாளம்) உள்ளேயும், யாவற்றினுக்கும் வெளியேயும் நிறைந்திருப்பவளே! எம்முடைய உள்ளத்திலே ஆனந்தக் களிப்பை உண்டாக்கும் கள்ளே! ஆனந்தத்திற்கு ஆனந்தமானவளே! எளியேனாகிய எனக்கும் அருள் பாலித்த என் கண்மணி போன்றவளே!