வாழ்வில் இன்பம் பெற அபிராமி அந்தாதியின் பாடல் -28
நம் வாழ்க்கையில் அனைத்து விதமான துன்பங்களும் நீங்கி வாழ்வை வளமாக்கும் இன்பங்களை அடைய எல்லாம் வல்ல இறைவனான சிவ பெருமானை வணங்கும் சோம வார நாளான இன்று அபிராமி அந்தாதியின் பாடலை பார்ப்போம் .

இம்மை மறுமை இன்பங்கள் அடைய
“சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த் தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே “
உரை விளக்கம்
தூய்மையான சொல்லோடு இணைந்த பொருள் போல ஆனந்தக் கூத்தாடும் துணைவருடன் இணைந்து நிற்கும் மணம் வீசுகின்ற அழகிய பூங்கொடி போன்றவளே! அன்றலர்ந்த பரிமள மலரைப் போல உள்ள உன் திருவடிகளை இரவென்றும், பகலென்றும் பாரமால் தொழுகின்ற அடியார் கூட்டத்திற்கே என்றும் அழியாத அரச போகமும், நல்ல மோட்சத்திற்கான தவநெறியும், சிவபதமும் வாய்க்கும்.
இவ்வாறு கண்ணதாசன் அவர்கள் உரை விளக்கம் தருகிறார்.