ஆன்மிகம்

மன நோயை அகற்றும் அபிராமி அந்தாதி!

மன நோயை அகற்றும் அபிராமி அந்தாதி படித்தால் நமக்கு ஏற்படும் இன்னல்கள் எல்லாம் அடியோடு மறையும். அபிராமி தாயின் அன்பு என்பது நமக்கு கிடைக்குமானால் உலகில் சிறந்து வாழ்வை பெறலாம்.

உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை; பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள்புனலால்
துடைத்தனை; சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே.

உரை விளக்கம்:

அபிராமி தாயை நம்பி நாம் படிக்கும் ஒவ்வொரு பாடலுக்குள்ளும் ஆற்றல் உண்டு . அதனை நாம் முழுமையாக இதனை உணர வேண்டும். அபிராமி அந்தாதி பாடல்களுக்கு விள்ளவுரையை கண்ணதாசன் அவர்கள் எழுதியிருக்கின்றார் அவற்றை நாம் காணலாம்.

மேலும் படிக்க: அபிராமி அந்தாதி 13-15 பாடல்கள் விளக்கவுரை

அபிராமி அன்னையே! நான் அகத்தே கொண்டிருந்த ஆணவம், கன்மம், மாயை என்கிற பொய் ஜாலங்களை உடைத்தெறிந்தாய். பக்திக்கனல் வீசும் அன்பான உள்ளத்தினை அளித்தாய். இந்த யுகத்தில் நின் தாமரை போலும் சேவடிக்குப் பணி செய்ய எனக்கு அருள் புரிந்தாய். என் நெஞ்சத்திலேயிருந்த அழுக்கையெல்லாம் துப்புரவாக உன்னுடைய அருள் வெள்ளத்தால் துடைத்தாய். பேரழகு வடிவே! நின் அருளை எப்படி நான் வாய்விட்டு உரைப்பேன்!

மேலும் படிக்க: அபிராமி அந்தாதி பாடல்10-12 உரை விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *