ஆன்மிகம்

அபிராமி அந்தாதி பாடல் வரிகள் மற்றும் விளக்கம்விளக்கம்

அன்னை அபிராமி அம்மன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் இது இப்பாடலை படித்தால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

பாடல் வரிகள்:

86: மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற
காலையும், சூடகக் கையையும், கொண்டு–கதித்த கப்பு
வேலை வெங் காலன் என்மேல் விடும்போது, வெளி நில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே
.

பாடல் விளக்கம்:

ஏ, அபிராமி! பாலையும், தேனையும், பாகையும் ஒத்த இனிய மொழியுடையவளே! இயமன் கோபித்துப் பல கிளைகளைக் கொண்ட சூலத்தை என்மீது செலுத்தும்போது, திருமாலும், பிரம்மனும், வேதங்களும், வானவர்களும் தேடியும் காணாத திருப்பாதங்களையும் சங்கையணிந்த திருக்கரங்களையும் கொண்டு நீ என் முன்னே காட்சி தந்தருள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *