அபிராமி அந்தாதி பாடல் வரிகள் மற்றும் விளக்கம்
முக்கண் உடைய அய்யன் சிவபெருமான் வணங்கக் கூடிய அன்னை அபிராமி தேவி பற்றி புகழ்ந்து பாடும் பாடல் இது. இப்பாடலை படித்தால் மோட்சம் கிட்டும்.
பாடல் வரிகள்:
74: நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்,
அயனும் பரவும் அபிராம வல்லி அடி இணையைப்
பயன் என்று கொண்டவர், பாவையர் ஆடவும் பாடவும், பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.
பாடல் விளக்கம்:
முக்கண்களையுடைய சிவன், திருமால், பிரும்மா முதலானோரும் வணங்கக்கூடிய தேவி அபிராமியாகும். அவளுடைய பாதங்களிலே சரண் என்றடைந்த அடியார்கள் இந்திர போகத்தையும் விரும்ப மாட்டார்கள். அரம்பை முதலான தேவ மகளிர் பாடி, ஆட, பொன் ஆசனமே கிட்டினும், அன்னையின் பாதச் சேவையையே பெரிதென நினைவார்கள்.