அபிராமி அந்தாதி பாடல் வரிகள் விளக்கம்
அன்னை அபிராமி பற்றி புகழ்ந்து பாடும் பாடல் இது இப்பாடலை படித்தால் வாழ்வில் முன்னேற்றம் அடையும்.
பாடல் வரிகள்:
65: ககனமும் வானும் புவனமும் காண, விற் காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவம்பெருமாற்கு, தடக்கையும் செம்
முகனும், முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ?–வல்லி. நீ செய்த வல்லபமே.
பாடல் விளக்கம்:
ஏ, ஆனந்தவல்லி அபிராமி! உனது கணவனாகிய சிவபெருமான் ஒரு காலத்தில் மன்மதனை அண்டமும், வானமும், பூமியும் காணும்படியாக எரித்தார். அப்படிப்படவருக்கும் நீ ஆறுமுகமும், பன்னிரு கைகளும் சிறந்த அறிவும் கொண்ட அழகனாகிய முருகனைப் பெற சக்தியைக் கொடுத்தாய். உன்னுடைய அன்புதான் என்னவோ!