அபிராமி அந்தாதி பாடல் வரிகள் மற்றும் விளக்கம்விளக்கம்
எதிரியை கூட மன்னித்து வேண்டிய வரங்களை அள்ளித் தரக்கூடியவள் நீ மட்டுமே. உன்னை துதித்து பாடிவந்தாள் செல்வ வளம் பெருகும்.
பாடல் வரிகள்:
64: வீணே பலி கவர் தெய்வங்கள்பால் சென்று, மிக்க அன்பு
பூணேன், உனக்கு அன்பு பூண்டுகொண்டேன், நின்புகழ்ச்சி அன்றிப்
பேணேன், ஒரு பொழுதும், திருமேனி ப்ரகாசம் அன்றிக்
காணேன், இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே.
பாடல் விளக்கம்:
ஏ, அபிராமி! உன்னையன்றி வீணாகப் பலி வாங்கும் வேறொரு தெய்வத்தை நாடேன். உன்னையே அன்பு செய்தேன். உன்னுடைய புகழ் வார்த்தையன்றி வேறொரு வார்த்தை பேசேன். எந்நேரமும் உன்னுடைய திருமேனிப் பிரகாசத்தைத் தவிர, வேறொன்றும் இவ்வுலகத்திலும், நான்கு திசைகளிலும் காண மாட்டேன்.