அபிராமி அந்தாதி பாடல் வரிகள் மற்றும் விளக்கம்விளக்கம்
அன்னை அபிராமி ஒரு நாயய் கூட ஒரு பொருட்டாக மதித்து அருள் புரியும் குணம் கொண்டவள் இவளது பாடல் படித்தால் புகழ் சேரும்
பாடல் வரிகள்:
61: நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்.–
தாயே, மலைமகளே, செங்கண் மால் திருத் தங்கைச்சியே.
பாடல் விளக்கம்:
தாயே! மலையரசர் மகளே! சிவந்த கண்களையுடைய திருமாலின் தங்கையே! நாயாகவுள்ள என்னையும் இங்கே ஒரு பொருட்டாக மதித்து, நீயே, தன்னை மறந்து ஆட்கொண்டு விட்டாய்! அது மட்டுமல்லாமல், உன்னையே உள்ளபடியே அறிந்து கொள்ளும் அறிவையும் பேயேனாகிய எனக்குத் தந்தாய். நான் பெறுதற்கரிய பேறல்லவோ பெற்றேன்!