அபிராமி அந்தாதி பாடல் வரிகள் மற்றும் விளக்கம்
பாலைவிட சொல்லில் இனிமையாவளே உன் புகழ் பாட நான் இப்பிறவி பெற்று வந்தேனோ இப்பாடலை படித்தால் வேலை கிடைக்கும்
பாடல் வரிகள்:
60: பாலினும் சொல் இனியாய். பனி மா மலர்ப் பாதம் வைக்க–
மாலினும், தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின்
மேலினும், கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப் பீடம் ஒரு
நாலினும், சால நன்றோ–அடியேன் முடை நாய்த் தலையே?
பாடல் விளக்கம்:
ஏ, அபிராமி! பாலைவிட இனிமையான சொல்லை உடையவளே! நீ உன்னுடைய திருவடித் தாமரையை, திருமாலைக் காட்டிலும் உயர்ந்த தேவர்கள் வணங்கும் சிவபிரானின் கொன்றையனிந்த நீண்ட சடைமுடியில் பதித்தாய். அடுத்துன் அருட்கண்கள் பட்டு உயர்ந்து நிற்கும் நால்வகை வேதத்திலே உன்னுடைய திருவடித் தாமரைகளைப் பதித்தாய். ஆனால் இன்று நாற்றமுடைய நாயாகிய என்னுடைய தலையையும், உன்னுடைய திருவடிகளில் சேர்த்துக் கொண்டாய். (மேற்கூறிய சிவபெருமான், நான்கு வேதங்களோடு என்னையும் ஒப்பிட, நான் அவ்வளவு சிறந்தவனா?)