ஆன்மிகம்

அபிராமி அந்தாதி பாடல் வரிகள் மற்றும் விளக்கம்

தாமரை போன்ற முகம் கொண்ட அபிராமி தாயே உன் புகழ் பாட வேண்டும் என்று நான் இப்பிறவி பெற்று வந்தேன். இப்பாடலை தினமும்படித்தால் செல்வம் பெருகும்.

பாடல் வரிகள்:

58: அருணாம்புயத்தும், என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத் தையல் நல்லாள், தகை சேர் நயனக்
கருணாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும்,
சரணாம்புயமும், அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே.

பாடல் விளக்கம்:

அபிராமி! வைகறையில் மலர்ந்த தாமரையினிடத்தும் என்னுடைய மனத்தாமரையிலும் வீற்றிருப்பவளே! குவிந்த தாமரை மொக்குப் போன்ற திருமுலையுடைய தையலே! நல்லவளே! தகுதி வாய்ந்த கருணை சேர்ந்த நின் கண் தாமரையும், முகத்தாமரையும், பாதத் தாமரையுமேயல்லாமல், வேறொரு புகலிடத்தை நான் தஞ்சமாக அடைய மாட்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *