ஆன்மிகம்

அபிராமி அந்தாதி பாடல் வரிகள் மற்றும் விளக்கம்

வறுமை என்று எவரிடமும் கையேந்தி நிற்காமல் அன்னை அபிராமியை தினமும் வணங்கி வந்தாள் வறுமை நீங்கி நல்வாழ்வு கிடைக்கும்.

பாடல் வரிகள்:

54: இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பால் சென்று, இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

பாடல் விளக்கம்:

ஏ, வறிஞர்களே! நீங்கள் வறுமையால் பாதிக்கப்பட்டு, ஒருவரிடத்திலே பொருளுக்காகச் சென்று, அவர்கள் உங்களை இழிவு படுத்தாமல் இருக்க வேண்டுமா? என் பின்னே வாருங்கள். முப்புர நாயகியின் பாதங்களையே சேருங்கள். தவத்தையே செய்யாத பழக்கமுடைய கயவர்களிடத்திலிருந்து என்னைத் தடுத்தாட் கொண்டவள் அவளே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *