அபிராமி அந்தாதி பாடல் வரிகள் மற்றும் விளக்கம்
அன்னையின் இப்பாடலை படித்தால் குடும்பத்தில் உள்ள சஞ்சலங்கள் நீங்கி நிம்மதி அடையும்.
பாடல் வரிகள்:
49: குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி, வெங் கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து,
அரம்பை அடுத்து அரிவையர் சூழ வந்து, அஞ்சல் என்பாய்–
நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே.
பாடல் விளக்கம்:
நரம்புக் கருவிகளைக் கொண்ட, இசையே வடிவாக உள்ள அபிராமியே! அடியேனாகிய என்னுடைய உடலையும், அதிலே இணைந்த உயிரையும் கொடுமையான எமன் வந்து பறிக்க, நானும் மரணத்திற்கு அஞ்சி வருந்துவேன். அப்பொழுது அரம்பையரும், தேவமகளிரும் சூழ என்னிடத்து வந்து அஞ்சேல் என்பாய்! எனக்கு அருள் புரிவாய்!