பிரிவுணர்ச்சி அகல அபிராமி அந்தாதியின் பாடல் – 44
நம் அன்னை ஆதிபராசக்தி ஒரே நேரத்தில் சிவபெருமானுக்கு மனைவியாகவும் தாயாகவும் திகழ்கிறாள்… அவளை மிஞ்சிய சக்தி வேறு எதுவும் இல்லை .. அவள் திருவடிகளை அடைந்தாலே நம் வாழ்வில் அனைத்து துன்பங்களும் நீங்கிவிடும்.. அவளைத் தவிர வேறு எந்த சக்தியும் நமக்கு துணை நிற்க தேவையில்லை என்கிறார் அபிராமி பட்டர்….
பாடல்
தவளே! இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே, அவர் தமக்கு அன்னையும் ஆயினள்; ஆகையினால்
இவளே, கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்
துவளேன், இனியொரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.
பாடல் விளக்கவுரை
நமக்குத் தாயான இவளே எங்கள் சங்கரனாரின் மனை மங்கலம் – இல்லத்திற்கு நன்மையைச் சேர்ப்பவள். அவளே ஆதிபராசக்தி என்னும் உருவில் சங்கரனாருக்கு அன்னையும் ஆயினள்.
ஆதலால் இவளே கடவுளர் எல்லாருக்கும் மேலான தலைவியானவள்.இனி மேல் வேறு தெய்வங்களைத் தொழுது தொண்டு செய்து அயர்சி அடையமாட்டேன்.
மேலும் படிக்க : திருப்புகழ் 28 அறிவழிய மயல்பெருக (திருச்செந்தூர்)