நம்முள் இருக்கும் தீய எண்ணங்களை ஒழிக்க அபிராமி அந்தாதியின் பாடல் – 43
நம்முள் இருக்கும் ஆணவம், மாயை ,வன்மம் போன்ற தீய எண்ணங்களை ஒழித்தாலே தீமையை ஒழித்துவிடலாம்… இப்பாடலை நாம் படிப்பதன் மூலம் நமது அபிராமி அன்னை நம்முள் இருக்கும் தீய எண்ணங்களை அழித்து தூய்மையான நல்ல எண்ணங்களை வழங்கி நமக்கு அருள்புரிவாள்….
பாடல்
பரிபுரச் சீறடி! பாசாங் குசை! பஞ்ச பாணி! இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமைநெஞ்சில்
பரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே.
பாடல் விளக்கவுரை
சிலம்பணிந்த அழகிய பாதங்களை உடையவளே! பாசத்தையும் அங்குசத்தையும் உடையவளே! பஞ்ச பாணங்களையும், இனிமையான சொல்லையும் உடைய திரிபுரசுந்தரியே ! சிவந்த சிந்தூர மேனி உடையவளே ! கொடிய மனத்தையுடைய முப்புரத்தை ஆண்ட அசுரரை அஞ்சி நடுங்கும்படி முப்புரத்தை அழித்த சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே !
இவ்வாறு கண்ணதாசன் அவர்கள் இப்பாடல் விளக்கவுரை எழுதியுள்ளார்.