உலகையே வசப்படுத்த உதவும் அபிராமி அந்தாதி பாடல் – 42
இப்பாடலில் அபிராமிபட்டர் நம் அபிராமி அன்னையின் ஞான அழகைப் பற்றி வர்ணித்துள்ளார்…..நம் அனைவருக்கும் வாழ்வில் நாம் நினைத்தது ,நமக்கு வேண்டியது நம் வசம் இருக்க வேண்டும் என்று ஆசை இருக்கும்… அப்படி நாம் வேண்டுவதை நம் வசப்படுத்தும் ஆற்றலை அபிராமி அன்னை இப்பாடலின் மூலம் நமக்கு அருள்வாள்..
பாடல்
இடம் கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
வடம்கொண்ட கொங்கை மலை கொண்டு, இறைவர் வலிய நெஞ்சை
நடம்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின்
படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப்பரிபுரையே.
பாடல் விளக்கவுரை
தகுந்த இடத்தில் இருந்து கொண்டு பெருமிதத்தால் விம்மி ஒன்றைக் கொண்டு இணையென்னும் படியாக அமைந்து, முருகியம் அதேநேரத்தில் மென்மையுடன் இளகியும், முத்து மாலையை அணிந்து இருக்கும் மலைகள் என்னும் படியான கொங்கைகளை கொண்டு நம் தலைவராம் சிவபெருமானின் எதற்கும் அசையாத வலிய நெஞ்சையும் உன் எண்ணத்திற்கு ஏற்ப ஆடம் படி செய்த, பிள்ளைகளான எங்களுக்கு அருள் செய்யும் நல்ல கொள்கை நலம் கொண்ட தலைவியே! நல்ல பாம்பு படம் எடுத்ததைப் போல் இருக்கும் அல்குலைக் கொண்ட, குளிர்ந்த பேச்சினை உடைய வேதங்களைக் காலில் சிலம்பாய் அணிந்தவளே! என் அபிராமி அன்னையே….
மேலும் படிக்க : சனிக்கிழமை விரதம் இருக்க சகல செல்வத்தை பெற்றுத் தரும்