ஆன்மிகம்

அபிராமி அந்தாதி பாடல் வரிகள் மற்றும் விளக்கம்

அபிராமி அன்னை பற்றி புகழ்ந்து பாடும் பாடல் வரிகள் இப்பாடலை படித்தால் புண்ணியம் கோடி கிடைக்கும்.

41. நல்லடியார் நட்புப் பெற

புண்ணியம் செய்தனமே மனமே! புதுப்பூங்குவளைக்
கண்ணியும், செய்ய கணவரும் கூடிநம் காரணத்தால்
நண்ணி இங்கேவந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே.

பாடல் விளக்கம்:

அபிராமி, புதிதாக மலர்ந்த குவளைக் கண்களையுடையவள். அவள் கணவரோ சிவந்த திருமேனியையுடைய சிவபெருமான். அவர்களிருவரும் இங்கே கூடிவந்து அடியார்களாகிய நம்மைக் கூட்டினார்கள். அத்துடன் நம்முடைய தலைகளை அவர்களுடைய திருப்பாதங்களின் சின்னமாகச் சேர்த்துக் கொண்டார்கள். அவர்களின் அருளுக்கு நாம் புண்ணியமே செய்திருக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *