சிறந்த அடியார்களின் நட்பைப் பெற அபிராமி அந்தாதியின் பாடல் – 41
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு… என்ற வள்ளுவரின் குறளுக்கேற்ப நட்பு என்பது மிகவும் அழகான ஒன்று.. ஒரு நல்ல நண்பனை பெற்றவன் இவ்வுலகத்தில் எதையும் சாதிக்க முடியும் எதிலும் சிறந்தவனாக திகழ்வான்..துன்பம் அவனை ஒருபோதும் நெருங்காது… அப்படிப்பட்ட ஒரு நட்பு சிறந்த அடியார்களுடன் கிடைத்தால் நாம் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும் அதற்காகத்தான் அபிராமி பட்டர் இப்பாடலை நமக்கு அருளியுள்ளார்..,
பாடல்
புண்ணியம் செய்தனமே மனமே! புதுப் பூங்குவளைக்
கண்ணியும், செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணிநம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே
பாடல் விளக்கவுரை
அபிராமி! புதிதாக மலர்ந்த குவளை கண்களை உடையவள். அவள் கணவரோ சிவந்த திருமேனியையுடைய சிவபெருமான். அவர்கள் இருவரும் இங்கே கூடி வந்து அடியார்களாகிய நம்மைக் கூட்டினார்கள். அத்துடன் நம்முடைய தலைகளை அவர்களுடைய திருப்பாதங்களின் சின்னமாகச் சேர்த்துக் கொண்டார்கள். அவர்களின் அருளுக்கு நாம் புண்ணியமே செய்திருக்கிறோம்.
இவ்வாறு கண்ணதாசன் அவர்கள் இந்த பாடலுக்கு விளக்கவுரை கூறியுள்ளார்.