பூர்வ புண்ணியம் பலன்கள் தருவதற்கு அபிராமி அந்தாதியின் பாடல் -40
நம் வாழ்வில் அனைத்து பலன்களும் கிடைக்க சுபகாரியங்கள் நடக்க வாழ்வில் இன்பம் பெற நமக்கு கண்டிப்பாக பூர்வஜென்ம புண்ணியம் என்பது வேண்டும்.நாம் பல ஜென்மங்களில் செய்த நன்மைகளும் நம் முன்னோர்களின் அருளாசியுமே பூர்வஜென்ம புண்ணியம் எனப்படும்.
பாடல்
பூர்வ புண்ணியம் பலன்தர
வாணுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதைநெஞ்சில்
காணதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே.
பாடல் விளக்கவுரை
ஒளி பொருந்திய நெற்றியை உடையவளை, விண்ணில் வாழும் தேவர்கள் அனைவரும் வந்து வணங்கிப் போற்றுவதற்கு விருப்பப்படும் எங்கள் தலைவியை ,ஒன்றும் அறியா பேதை நெஞ்சில் காணுவதற்கு எளிதில்லாத கன்னியை காணும் அன்பு கொள்ள வேண்டும் என எண்ணினேனே. அந்த எண்ணம் நான் முன்பு செய்த புண்ணியப் பயன் தானே..
இவ்வாறு அபிராமிபட்டர் நமது அபிராமி அந்தாதியின் உங்களை பாடியுள்ளார்.
மேலும் படிக்க : நரகாசுரனை கொன்ற நாள் தீபாவளி.. எப்படி உருவாச்சுனா!