தடைபட்ட திருமணம் நிறைவேற ஆசைப்பட்ட துணைவர் கிடைக்க அபிராமி அந்தாதியின் பாடல் 35
அபிராமி அந்தாதியின் ஒவ்வொரு பாடல்களும் மிகவும் சக்திவாய்ந்த விசித்திரமான பலன்களைக் கொடுக்கக் கூடியதாகும். இப்பாடல்களில் நாம் படிக்கும் போது மனம் நிம்மதி அடையும் வாழ்வில் நற்பலன்களை தேடித்தரும். தடைபட்ட திருமணங்கள் நடக்கவும், நாம் ஆசைப்பட்ட வாரு திருமணங்கள் நடக்கவுமே இப்பாடல் ஆகும்.
பாடல்
திங்கள் பசுவின் மணம் நாறும் சீறடி சென்னிவைக்க
எங்கட்கு ஒருதவம் எய்தியவா! எண்ணிறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? தரங்கக் கடலுள்
வெங்கண் பணியணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே.
பாடல் விளக்கம்
திங்களை முடி மேல் சூடிய இறைவனின் நறுமணம் வீசும் சிறந்த திருவடிகள் எங்கள் தலைமேல் வைக்க எங்களுக்கு இந்த தவம் எப்படி எய்தியது?
எண்ணிக்கையில் அளவில்லாத விண்ணில் வாழும் விண்ணவர்கள்(தேவர்கள்) தங்களுக்கும் இந்த தவம் கிடைக்குமா?
அலைவீசும் கடலில் வெம்மையான கண்களையுடைய பாம்பு படுக்கையின் மேல்
துயில் கொள்ளும் பரம்பொருளே! (விஷ்ணு ரூபிணியான வைஷ்ணவியே) !