சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்க அபிராமி அந்தாதியின் பாடல் – 34
மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூரில் அபிராமி அம்மன் அமிர்தகண்டேஸ்வரர் ஆலயம் உள்ளது. மார்க்கண்டேயருக்கு சிவபெருமான் காட்சியளித்த தளமே திருக்கடையூர் ஆகும். ஒரு பாடலின் முடிவு அடுத்த பாடலுக்கு துவக்கமாக அமையும் இலக்கண முறையே அந்தாதி ஆகும்.
நமது அபிராமி அன்னை தன்னிடம் வந்து சரணடையும் பக்தர்கள் அனைவரையும் கைவிடாமல் அவர்களின் அனைத்துத் துன்பங்களிலிருந்தும் அவர்களை காத்து அருள் புரிவாள். இன்றைய நாள் நமது அன்னையை வழிபட்டு அவனன் அருள் பெறுவோம்…
பாடல்
வந்தே சரணம் புகும் அடியாருக்கு வான்உலகம்
தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொன்
செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே.
விளக்கவுரை
தன்னிடம் வந்து சரணடையும் பக்தர்களுக்கு அன்புடன் சுவர்க்கலோகப் பதவியை அளிக்கும் அன்னை அபிராமித்தாயே! நீ நான்கு முகங்களை உடைய பிரம்மனின் படைப்புத் தொழிலில் இருக்கின்றாய்.. பசுமையான தேன் கலந்த துளசி மாலையும், நவமணி மாலைகளையும் அணிந்த மார்பினனாகிய திருமாலின் மார்பில் இருக்கின்றாய்! சிவபெருமானுடைய இடது பக்கத்திலும், பொன் தாமரை மலரிலும், பரந்து விரிந்த கதிர்களை உடைய சூரியன் இடத்திலும், சந்திரன் இடத்தும் தங்கி இருக்கின்றாய். உன்னை சரணமென்று வந்தடையும் பக்தர்களைத் , அவர்களின் துன்பங்களில் இருந்து நீக்குகின்றாய்..
இவ்வாறு கண்ணதாசன் அவர்கள் அபிராமி அந்தாதியின் இப்பாடலுக்கு விளக்கவுரை கூறுகிறார்.