இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்க அபிராமி அந்தாதியின் பாடல் – 33
இறைவனின் அருள் நம் வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக இருக்கும். நம் வாழ்வில் தீயவை நல்லவை செய்து நாம் உயிர் பிரிகின்ற தருவாயில் எமன் நம்மை அழைக்கும் போது படும் துன்பத்தின் போது நமது அம்பிகை தாய் நம்முடன் இருந்தால் எவ்வாறு இருக்கும். அதற்காகவே இந்த பாடல்
இழைக்கும் வினைவழியே ஆடும் காலன் எனைநடுங்க
அழைக்கும் பொழுதுவந்து அஞ்சல் என்பாய்; அத்தர் சித்தமெல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமலைக் கோமளையே!
உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே.
பாடல் விளக்கவுரை
நான் இழைக்கும் (செய்யும், செய்த, செய்யப் போகும்) நல்வினைத் தீவினைகளுக்கேற்ப எனை தண்டிக்கும் கால தேவன் (எமன்) நான் நடுங்கும்படி என்னை அழைக்கும் போது,
தந்தையாம் சிவபெருமானுடைய சித்தம் எல்லாம் குழையும் படி செய்யும் மணம் வீசும் சந்தனம் பூசிய குவிந்த முலையை உடைய இளையவளே! மென்மையானவளே!உன்னையே என் அன்னை என்பேன்.
அப்போது உயிரும் உடலும் ஊசலாடி நான் மரண வேதனையில் துன்புறும் போது என் முன்னே ஓடி வந்தே அஞ்சாதே என்று சொல்வாய்.
இப்பாடலை தொடர்ந்து படித்தால் மரணப் பிடியில் நாம் சிக்கிக் கொண்டு அவதிப்படும்போதுகூட அம்பிகையை தாயின் துணை நம்முடன் இருக்கும்.