துர்மரணம் வராமலிருக்க அபிராமி அந்தாதியின் பாடல் 32
நம் வாழ்வின் லட்சியமாக இருப்பதே வாழும் வரை எந்த உயிர்களையும் துன்புறுத்தாமல் ஓர் இனிய வாழ்வை வாழ வேண்டும் என்பதே! நம் வாழ்நாள் முழுவதும் எப்படி வாழ்ந்தோம் என்பதை உணர்த்துவது நாம் இறக்கும் பொழுது நம் நிலை. அந்த நிலை நன்றாக நாம் இல்லாவிட்டாலும் நம் பெயரை நினைத்துக்கொண்டு இருக்கும் அளவிற்கு இருக்க வேண்டும் நம் அபிராமித் தாயின் இப்பாடலை நாம் படிப்பதன் மூலம் வாழ்வில் துர்மரணம் வராமல் இருக்கும்.
பாடல்
ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லல்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக்கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர்பாகத்து நேரிழையே!
பாடல் விளக்கம்
ஈசனின் இடப்பாகத்தில் அமர்ந்தருளும் தேவியாம் அன்னையே ! நுண்ணிய வேலைப்பாடமைந்த அணிகலன்களை அணிந்த தேவியே ஆசைகளால் அலைகள் பொங்கி எழும் கடலில் அகப்பட்டு அதன் விளைவாக எமனின் கையிலுள்ள கால பாசத்தில் சிக்கித் துன்பட வேண்டியிருந்த என்னை , உன் திருவடியான தாமரை மலரை, எளியவனான என் சிரசின் மீது வைத்து, வலி வந்து என்னை ஆட்கொண்டு அருளிய உன் பேர் அருள் பெருங்கருணையை எப்படி போற்றி உரைப்பேன்?