மறுமையில் இன்பம் உண்டாக அபிராமி அந்தாதியின் பாடல் – 31
அபிராமி தேவியின் அருளால் அனைத்து நிலைகளையும் மறந்து தேவி தேவனின் அருளால் வாழ்வில் இன்பம் பெற !!!!
பாடல்
உமையும், உமையொரு பாகனும் ஏக உருவில் வந்திங்கு
எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்; இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை; ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை;
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே.
விளக்கவுரை
உமையன்னையும் ,சிவபெருமானும் ஒரே உருவாக வந்து,இங்கே இந்த உலகிலேயே கீழான என்னையும் அவர்களுக்கு அன்பு செய்யும் படி அருள்புரிந்தார்.
இறை அருள் பெறுவதற்கு நான் எந்த சமயத்தையும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை , பிறப்பெடுப்பு சுழலில் விடுபட்டுவிட்டதால் இனி எனக்கு பிறவிகள் இல்லை அதனால் பெற்றெடுக்க ஒரு தாயும் இல்லை.
அழகிய தோள் உடைய பெண்களின் மேல் உள்ள ஆசையும் தானாகவே அமைதி உற்றது.
அம்மை அப்பன் என்னுடன் இருந்து எனக்கு வழி காட்டி விட்டதால் எனக்கு எந்த குழப்பமும் இல்லை. இப்பாடலை தொடர்ந்து படித்தால் “மறுமையில் இன்பம் உண்டாகும்”