வாழ்வில் அனைத்து சித்திகளையும் அடைய அபிராமி அந்தாதியின் பாடல் -29
ஒரு செயலை நன்றாக செய்பவரை யானை பலம் உடையவன் என்பார்கள். அதுபோல நம் வாழ்வில் அனைத்து துன்பங்களையும் நீக்கி நம் குறிக்கோளை அடைய, செயலை வலுவுடன் செய்து பயன்பெற அபிராமி அந்தாதியின் சித்தியும் சக்தியும் அடையும் பாடல் வரிகளையும் அதன் பொருளையும் காண்போம்!
பாடல்
சித்தியும், சித்திதரும் தெய்வமுமாகத் திகழும்
பராசத்தியும், சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும், புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தையன்றே.
பாடல் விளக்கம் :
அபிராமி தேவியே! நீயே சகலத்திற்கும் சித்தியாவாய். அச்சித்தியை தரும் தெய்வமான ஆதி ஆதிசக்தியாகவும் திகழ்கின்றாய். பராசக்தியே நீ கிளைத்தெழ காரணமான பரமசிவமும், அச்சிவத்தைக் குறித்துத் தவம் செய்யும் முனிவர்களுக்கு முக்தியும், அம்முக்தியால் ஏற்படுகின்ற விதையும், அவ்விதையில் ஏற்பட்ட ஞானமும், ஞானத்தின் உட்பொருளும், என் நின்று , சகல பந்தங்களினின்று , காக்ககூடிய தெய்வம் திரிபுரா சுந்தரியாகிய உன்னைத் தவிர வேறு யார் உளர் ?
இவ்வாறு கண்ணதாசன் அவர்கள் அபிராமி அந்தாதியின் பாடலுக்கு விளக்கவுரை தருகிறார்.