ஆன்மிகம்ஆலோசனை

அபிராமி அந்தாதி

தினமும் காலை, மாலை விளக்கேற்றி அபிராமி அந்தாதி பாராயணம் செய்யலாம். தினமும் முடியாதவர்கள் அம்மனுக்கு உகந்த தினங்களில் பாராயணம் செய்வது சிறப்பு. அபிராமியின் அருள் பூரணமாக பெற்று வாழ்வில் அனைத்து பாக்கியங்களும் வந்து சேரும்.

அபிராமி அந்தாதி

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்

மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க் கமலை

துதிக்கின்ற மின் கொடி மென்கடிக் குங்குமத் தோயமென்ன

விதிக்கின்ற மேனி அபிராமி யென்றன் விழுத்துணையே

பூத்தவளே புவனம் பதினான் கையும் பூத்த வண்ணம்

காத்தவளே பின் கரந்தவளே கறைக் கண்டனுக்கு

மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே

மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம்வந்திருப்பதே

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த

அணியே அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்க்கு

பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே

பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே.

தவளே இவளே எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்

அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினாள்

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமர்த்

துவளே இனியொரு தெய்வமுண்டாக மெய்த் தொண்டு

செய்தே.

நாயகி நான்முகி நாராயணிகை நளின பஞ்சு

சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு

வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கியென்

றாயகி யாதி யுடையாள் சரண் மரணமக்கே.

இல்லாமை சொல்லி யொருவர் தம்பாற் சென் றிழிவு பட்டு

நில்லாமை நெஞ்சி னினைகுவி ரேனித்த நீடு தவங்

கல்லாமை கற்ற கயவர்தம் பாலொரு காலத்திலுஞ்

செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

அபிராமி அம்மை பதிகம்

கலையாத கல்வியும் குறையாத வயதும்

ஓர் கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையும் குன்றாத இளமையும்

கழு பிணி இலாத உடலும்

சலியாத மணமும் அன்பு அகலாத மனைவியும்

தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்

தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலும்

ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்

துய்ய நின் பாதத்தின் அன்பும் உதவி

பெரிய தொண்டரோடு கூட்டு கண்டாய்

அலையாழி அரி துயிலும் மாயனது தங்கையே

ஆதி கடவூரின் வாழ்வே

அமுதீசர் ஒரு பாகம் அகலாத – சுகபாணி

அருள்வாமி அபிராமியே.

படிக்கும் போது தினமும் இதை காலை, மாலை தொடர்ந்து சொல்வதால் படிப்பில் நல்ல முன்னேற்றம் வரும்.

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா

மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் – வஞ்சமில்லா

இனம் தரும் அன்பர் என்பவர்க்கே

கணம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *