ஆசபட்ட எல்லாத்தையும்… வியாபாரி படம்
வியாபாரி இப்படம் 2007ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும் இதில் எஸ். ஜே. சூர்யா, தமன்னா,நாசர்,வடிவேலு மற்றும் பலர் நடித்துள்ளனர் இத்திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார் இதன் இசையமைப்பாளர் தேவா
ஆசபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்…
அம்மாவ வாங்க முடியுமா…
நீயும் அம்மாவ வாங்க முடியுமா…
குழு (பெண்கள்) : ஆசபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்…
அம்மாவ வாங்க முடியுமா…
நீயும் அம்மாவ வாங்க முடியுமா…
ஆண் : ஆயிரம் உறவு உன்ன தேடி வந்தே நின்னாலும்…
தாய் போலே தாங்க முடியுமா…
குழு (பெண்கள்) : ஆயிரம் உறவு உன்ன தேடி வந்தே நின்னாலும்…
தாய் போலே தாங்க முடியுமா…
ஆண் : உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா…
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாயடா…
குழு (பெண்கள்) : உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா…
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாயடா…
ஆண் : ஆசபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்…
அம்மாவ வாங்க முடியுமா நீயும்…
மேலும் படிக்க : காற்று வெளியிடை நாயகி மக்களுக்கு என்ன செய்தி வைத்துள்ளார்
—BGM—
ஆண் : பட்டினியா கெடந்தாலும் பிள்ளைக்கு பால் கொடுப்பா…
பால் குடிக்கும் பிள்ளை முகம் பாா்த்தே பசி மறப்பா…
இளவட்டம் ஆன பின்னும் எண்ணெய் தேச்சு குளிக்க வைப்பா…
உச்சி முதல் பாதம் வர உச்சி கொட்டி மகிழ்ந்திடுவா…
ஆண் : நெஞ்சிலே நடக்க வைப்பா…
நிலாவ பிடிக்க வைப்பா…
பிஞ்சு விரல் நகம் கடிப்பா…
பிள்ளை எச்சு சோறு தின்பா…
ஆண் : பல்லு முளைக்க நெல்லு முனையால்…
மெல்ல மெல்லதான் கீரி விடுவா…
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாயடா
பெண் : ஆசபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்…
அம்மாவ வாங்க முடியுமா…
நீயும் அம்மாவ வாங்க முடியுமா…
—BGM—
ஆண் : மண்ணில் ஒரு செடி மொளைச்சா…
மண்ணுக்கு அது பிரசவம்தான்…
உன்னை பெற துடி துடிச்சா…
அன்னைக்கு அது பூகம்பம்தான்…
ஆண் : சூரியன சுத்திகிட்டு தன்னை சுத்தும் பூமி அம்மா…
பெத்தெடுத்த பிள்ளைய சுத்தி பித்து கொள்ளும் தாய்மை அம்மா…
கர்ப்பத்தில் நெளிந்த உன்னை நுட்பமாய் தொட்டு ரசிப்பா…
பேதை போல் அவள் இருப்பாள் மேதையாய் உனை வளர்ப்பா…
ஆண் : என்ன வேண்டும் இனி உனக்கு…
அன்னை மடியில் சொர்கம் இருக்கு…
என்ன வேண்டும் இனி உனக்கு…
அன்னை மடியில் சொர்கம் இருக்கு…
மேலும் படிக்க : நடிகை சாக்ஷி அகர்வால் ஹாட் போட்டோஸ்…!