சினிமா

ஆரவ் திருமணம் யாருடன் தெரியுமா

நரேஷ் சம்பத் இயக்கத்தில் “ராஜ பீமா” என்ற ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஆரவ். இந்த படத்தில் ஓவியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

ராஹீ கௌதம் மேனனின் இயக்கத்தில் வெளிவர உள்ள “ஜோஷுவா இமை போல் காக்க” படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். தற்போது ஆரவ் நடிகை ராஹீயை செப்டம்பர் 6 ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளன.

தமிழ் படங்களில் சில வேடங்களில் நடித்த பிறகு பிரபல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் பங்கு பெற்று புகழ்பெற்றவர் ஆரவ் நஃபீஸ். இதன் பிறகு சரண் இயக்கத்தில் “மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்” படத்தில் கதாநாயகனாக நடித்தார். இப்படம் பெரும் வெற்றி அடையவில்லை என்றாலும் பலதரப்பட்ட விமர்சனங்கள் கிடைத்துள்ளன. செப்டம்பர் 6 இவர் கௌதம் மேனன் படத்தின் கதாநாயகி ராஹீயை திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் கிடைத்தன.

ஆரவ் பங்கேற்ற அதே ரியாலிட்டி ஷோவில் நடிகை ஓவியாவும் பங்கேற்றிருந்தார். பல பிரச்சனைகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பேசப்பட்டன. இருவரும் நண்பர்கள் தான் என்றும் திருமணத்தில் தங்களுக்கு ஆர்வமில்லை, நம்பிக்கை இல்லை என்றும் ஓவியா தெளிவாக கூறினார்.

செப்டம்பர் 6 ஆரவ் நடிகை ராஹீயை திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் வந்தன. ஆனால் இந்த திருமணம் பற்றிய எந்த தகவலும் இரு தரப்பினரிடம் இருந்து இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *