வளமான வாழ்வு தரும் ஆனி மாதப் பௌர்ணமி
ஆனி மாதம் தமிழ் தேதி 20, ஜூலை 4, 2020 அன்று சனிக்கிழமை ஆனி மாதப் பௌர்ணமி. அறிவியலின் ரீதியாக பார்த்தால் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியின் சந்திரனின் ஒளி பெரும் பகுதி முழுவதுமாக பூமிக்கு தெரியும் நாளைத் தான் நாம் பௌர்ணமி என்று கூறுகிறோம்.
சந்திரனின் ஒளி பெறாத பகுதி முழுவதுமாக பூமிக்கு தெரிகின்ற நாளை அம்மாவாசை என்றும் அழைக்கிறோம். பௌர்ணமி அன்று நிலவில் இருந்து வெளிவரும் காந்த ஈர்ப்பு விசையானது. பூமியின் மேல் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு அன்றைய தினத்தில் கடல் அலைகள் அதிகமாக மேலெழும்பும் என கூறப்படுகிறது.
உயிரினங்களின் எழுச்சியும் எண்ண ஓட்டங்களும் அதிகமாக இருக்கும். இன்றைய தினத்தில் நிலவை பலரும் ரசித்தாலும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகின்றனர். காலம் காலமாக இந்த பௌர்ணமி பூஜையை நம் முன்னோர்கள் இடமிருந்து கடைபிடித்து வருகின்றனர்.
தொடர்ந்து பௌர்ணமி பூஜையை செய்து வருவதால் திருமண பாக்கியமும் மாங்கல்யம் நிலைத்து நிற்கும் என்றும் நம்பப்பட்டு வருகின்றது. பௌர்ணமி பூஜையும் இயற்கை வழிபாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. பௌர்ணமி இரவு அதிக வெளிச்சம் இருக்கும் என்பதால் மக்கள் இரவு நேரங்களில் கொண்டாடுவார்கள்.
பௌர்ணமி நாளில் காலையில் எழுந்ததிலிருந்து உண்ணா நோன்பிருந்து, பௌர்ணமி பூஜையை முடித்த பின்பு உண்ணுதலை பவுர்ணமி விரதம் என்று கூறப்படுகிறது. வருடத்திற்கு 12 பவுர்ணமி நாட்களும் இந்த பவுர்ணமி விரதம் இருக்கலாம். ஆனி மாதத்தில் கேட்டை மூல நட்சத்திரத் துடன் கூடிய பவுர்ணமி வரும். இந்த மாதத்தில் தான் சாவித்ரி விரதமும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த பவுர்ணமியில் முக்கனிகள் படைக்கப்பட்டு கண்ணனை நினைத்து விரதம் இருப்பதால் காதல் கைகூடுமா. பவுர்ணமி அன்று சாவித்திரி விரதம் மேற்கொள்ளப்படுவதால் மாங்கல்ய பலம் ஐஸ்வர்யம் நீண்ட ஆயுள் கிடைக்கப்பெறும் என்பது நம்பிக்கை. இந்த சாவித்திரி விரதத்தை, காமாட்சி விரதம், கௌரி விரதம் என பல்வேறு பெயர்களைக் கொண்டு அழைக்கப்படுவதுண்டு.
பவுர்ணமியில் பொதுவாக அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவதுண்டு. அம்மன் கோவில்களில் விளக்கு பூஜை, அன்னதானம் ஆகியவை நடைபெறுகின்றன. பவுர்ணமி அன்று விரதம் மேற்கொள்ளப்படுவது. பகல் முழுவதும் உணவு உண்ணாமல் விரதம் மேற்கொள்ள வேண்டும். கோவில்களில் வழிபாடு மேற்கொண்டு உணவு உண்டு விரதத்தை நிறைவு செய்வர்.
வழிபாட்டின் போது அம்மன் குறித்த பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். பவுர்ணமியில் கிரிவலம் செய்வது சிறப்பானது. மலையை சுற்றி வருவதால் மனதிற்கு அமைதியும். உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். கூட்டமாக பாடல்களைப் பாடிக்கொண்டு சுற்றும் போது ஆன்ம பலமும், தேக பலமும் கிடைப்பதுடன். நம் வாழ்வின் வளமாக்கும் பௌர்ணமியில் வழிபாடு மேற்கொண்டு நற்பலனை பெறுவோம்.