சினிமாசினிமா பாடல்கள்

ஆனந்த யாழை மீட்டுகிறாள்….தங்க மீன்கள் படம்

தங்க மீன்கள் இப்படம் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும் இதில் ராம் சாதனா செல்லா ஆகியோர் நடித்துள்ளனர் இத்திரைப்படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறவில்லை. இதன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா

ஆனந்த யாழை மீட்டுகிறாய் – அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!
அன்பெனும் குடையை நீட்டுகிறாய் – அதில்
ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்!

இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை!
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மழையின் அழகோ தாங்கவில்லை!
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி!
இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி!

ஆனந்த யாழை மீட்டுகிறாய் – அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!
அன்பெனும் குடையை நீட்டுகிறாய் – அதில்
ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்!

தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேட்குதடி
தன்னிலை மறந்து பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி
அடி கோயில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?
உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

மேலும் படிக்க : மாம்பழம்மா மாம்பழம்…போக்கிரி படம் பாடல்

உன் முகம் பார்த்தால் தோணுதடி வானத்து நிலவு சின்னதடி மேகத்தில் மறைந்தே பார்க்குதடி உன்னிடம் வெளிச்சம் கேட்க்குதடிஅதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து வீட்டுக்கு அனுப்பு நல்லபடி இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி!

ஆனந்த யாழை மீட்டுகிறாய் – அஅடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!
ஆனந்த யாழை மீட்டுகிறாய் – அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!

மேலும் படிக்க : என்ன படம் பா சஃபியும் சுஜாதயும் : திரை விமர்சனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *