Pollachi aaliyaar dam history: இயற்கை எழில் கொஞ்சும் ஆழியாறு அணையின் வரலாறு,சுற்றுலா தளங்கள்
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைந்துள்ள ஆழியாறு அணை இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் காட்சி அளிக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் இந்த ஆறு என்றும் கடல் போல் காட்சி அளிப்பதால் ஆழியாறு என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. ஆழி என்றால் கடலை குறிக்கும் என்பது நமக்கு தெரியும். கடலின் பெயர் கொண்ட இந்த ஆறு பெயருக்கு ஏற்றார் போலவே மிக பிரம்மாண்டமாய் இயற்கை எழில் சூழ காடும் கடலும் கலந்து இருப்பது போன்ற தோற்றத்தை நமக்கு தருகிறது.
ஆழியாறு அணை தோற்றம்
ஆழியாறு அணை பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வசதி மூலம் கட்டி முடிக்கப்பட்டது.ஆழியாறு அணையானது 1957 ஆம் ஆண்டு கட்ட தொடங்கப்பட்டு 1962 ஆம் ஆண்டு அணை கட்டி முடிக்கப்பட்டது.1962 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட ஆழியாறு அணையானது அப்போது தமிழக முதல்வராக இருந்த கர்மவீரர் காமராசர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் ஆழியாறு அணை வடமேற்கு திசையில் பாய்ந்து கேரள மாநிலத்தில் உள்ள பாரதபுழா என்ற ஆற்றில் சென்று கலக்கிறது.
சுற்றுலா தளங்கள்
மலைகளால் சூழ்ந்து அனைவரின் மனதை மயக்கும் எழில் கொஞ்சும் இடமாக இருக்கும் ஆழியாறு அணையை சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் அழகிய இடமாக உள்ளது. அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் வகையில் மேலும் பல சுற்றுலா இடங்கள் அணையை சுற்றி உள்ளது.
உல்லாசப் படகு
கோவை மாவட்டத்திலிருந்து 65 கிலோ மீட்டர்,பொள்ளாச்சியில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஆழியாறு அணையில் உல்லாச படகு வசதி உள்ளது. சுற்றுலா பயணிகள் இங்கு படகு சவாரி செய்து மனம் மகிழும் படி பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.
மீன் பண்ணை , தீம் பார்க்
கொஞ்சி விளையாடும் மேகங்கள், ஒன்றோடு ஒன்று இணைந்து விலகும் மேகக் கூட்டங்கள், பசுமையின் ராணியாக காட்சியளிக்கும் மலை கூட்டங்கள் , ஆழி போல் சூழ்ந்திருக்கும் நீர் என ஆழியாறு அணையின் அழகை காணவே சுற்றுலா பயணிகளுக்கு ஒரு நாள் ஆகிவிடும். அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் மேலும் ஆழியாறு அணையில் மீன் பண்ணை மற்றும் தீம் பார்க், மீன் காட்சியகம் ஆகியவை உள்ளது. இவற்றை குழந்தைகளுடன் சென்று கண்டு கழிக்கலாம்.நுழைவு சீட்டு மட்டும் பெற்றுக் கொண்டு நீங்கள் இவை அனைத்தையும் பார்த்து மகிழ ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பார்வை இடம் ( View point )
ஆழியாறு அணையில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் தீம் பார்க் அமைந்துள்ளது. அங்கு முதலை, பாம்பு ,யானை ஆகியவற்றின் உருவங்கள் அழகாக வர்ணம் தீட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பூத்துக் குலுங்கும் பூஞ்சோலைகளும் உள்ளது .மேலும் இயற்கையின் அழகை தன்னுள் மறைத்து வைத்திருக்கும் ஆழியாறு அணையின் ஒட்டுமொத்த அழகை நாம் கண்டு ரசிக்கும் வகையில் வியூ பாயிண்ட் (view point) தீம் பார்க் இன் உள்ளே உள்ளது.நீங்கள் அங்கு சென்று பார்த்தால் ஆழியாறு அணையின் அழகும், பறந்து விரிந்த தென்னை மரங்களின் அழகும், பசுமையை அள்ளித்தரும் மலைகளின் அழகும் சேர்ந்த காட்சியை பார்க்கலாம். அங்கு நின்று நீங்கள் பார்க்கும் பொழுது மனதிற்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் நீங்கள் அங்கு குடும்பத்துடன் நின்று போட்டோ எடுத்துக் கொள்ளலாம்.
குரங்கு அருவி ( Monkey falls )
ஆழியாறு அணையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் குரங்கருவி என்னும் கவி அருவி உள்ளது. இந்த அருவியில் இருந்து வரும் நீர் மூலிகைகள் கலந்த நீராக வருவதால் இங்கு குளிக்கும் போது கவலைகள் மறந்து புத்துணர்ச்சியுடன் மகிழ்வாக இருக்கும். மேலும் அருவியில் இருந்து வரும் நீர் சற்றும் கலங்காமல் மிக மிக தெளிவாக கண்ணாடி போல் வருகிறது. குழந்தைகளுடன் சென்று சென்று பொழுதை கழிக்க இது ஒரு மிகச்சிறந்த இடமாக இருக்கும். மேலும் நண்பர்களுடன் செல்லும் பொழுது இந்த அருவியை விட்டு வரவே மனம் வராது.அவ்வளவு ரம்மியமாக இருக்கும்.
டாப்சிலிப் ( Topslip)
ஆழியாறு அணைக்கு செல்பவர்கள் ஒரு நாள் முழுவதும் பொழுதை கழித்து விட்டு அருவியில் குளித்துவிட்டு மாலை வேளையில் வேலையில் அங்கிருக்கும் தீம் பார்க்கில் சற்று நேரம் பொழுதை கழித்துவிட்டு செல்லலாம். மேலும் ஒரு நாள் தங்கி இருந்து சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகள் மறுநாள் காலையில் ஆழியாறு அணையில் இருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் இருக்கும் டாப்ஸ்லிப்பருக்கு செல்லலாம். புலிகளின் கூடாரமாக விளங்கும் டாப்ஸ்லிப் உங்களுக்கு மிகச் சிறந்த அனுபவத்தை கொடுக்கும் இடமாக இருக்கும். மேலும் ஆனைமலை புலிகள் காப்பகம் இங்கு உள்ளது. சுற்றுலா பயணிகள் ஜீப் சபாரி (Zeep Safari) செல்லலாம் . மேலும் Elephant safari ஆகியவையும் செல்ல வசதிகள் உள்ளது.
மயிலாடுதுறை ஆறு
ஆழியாறு அணையில் இருந்து சிறிது தூரத்தில் கோட்டூர் பகுதிக்கு உட்பட்ட இடத்தில் மயிலாடுதுறை என்னும் ஆறு உள்ளது. இதனை ஆறு என்று சொல்வதை விட சிறிய அருவி என்றே கூறலாம். கோட்டூர் பகுதியில் இருக்கும் இந்த ஆறு தென்னை மரங்கள் சூழ்ந்து பசுமையின் நடுவில் இருக்கும் சிறிய கடல் போல காட்சி அளிக்கும் இந்த இடமே பார்ப்பதற்கு அவ்வளவு ரம்யமாக இருக்கும். ஆழியாறு அணைக்கு செல்பவர்கள் கட்டாயம் இந்த மயிலாடுதுறை ஆற்றிற்கு சென்று பார்த்து வர வேண்டும்.
வால்பாறை ( Vaalpaarai )
மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் ஆழியாறு அணைக்கு மேல் சென்றால் வால்பாறையின் அழகையும் கண்கூடாக பார்த்து விட்டு திரும்பலாம்.முதலில் அட்டகத்தி அதனை பார்த்து விட்டு சென்றால் மேலே செல்ல செல்ல தேயிலை தோட்டம், வளைந்து வளைந்து செல்லும் பாதை மேகக் கூட்டங்கள் நம்மில் மோதும் காட்சி ஆகியவற்றை பார்க்கலாம். மேலும் வால்பாறையில் சுற்றி பார்க்க மிக அருமையான பல இடங்கள் உள்ளது.
இவ்வாறு ஆழியாறு அணையில் பலவிதமான நம்மை மகிழ்விக்கும் இடங்கள் உள்ளது. இந்த இடங்களை சுற்றுலா பயணிகள் கட்டாயம் கண்டு கழித்து குடும்பத்துடன் சந்தோஷமாக ஒரு நாள் பொழுதை கழிக்க ஆழியாறுஅணை மிகச் சிறந்த இடமாக உங்களுக்கு இருக்கும். இயற்கையின் எழில் சூழ, பசுமை கொஞ்சி விளையாடும் கடல் போன்று காட்சியளிக்கும் ஆழியாறு அணையில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நீர்வரத்து அதிகமாக காணப்படும்.. எனவே இந்த மாதங்களில் சுற்றுலா பயணிகள் வந்தால் வந்தால் மிக அழகாக இருக்கும்.
T