ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்வாழ்க்கை முறை

ஆடிப்பெருக்கு 2022 செய்ய வேண்டிய முக்கிய வழிபாடுகள்

நாம் உயிர் வாழ்வதற்கு முக்கிய காரணமாக உள்ள இன்றியமையாத ஒன்றாக இருக்கும் நீருக்கு மரியாதை செலுத்தும் தினமாக ஆடி 18 கொண்டாடப்படுகிறது. ஆடி பதினெட்டு அன்று காவிரி அன்னையை போற்றி காவிரி தாயை நினைத்து வணங்கும் நாளாக உள்ளது. இந்த நாளில் எந்த செயல் செய்தாலும் அது வெற்றிகரமாக முடியும் . எந்த ஒரு சுபகாரியமோ அல்லது தொழில் தொடங்கினாலோ அமோகமான வெற்றியை கொடுக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளில் நாம் செய்ய வேண்டியவை குறித்து பார்ப்போம்..

காவிரி அன்னைக்கு உரிய நாளாக ஆடி 18 உள்ளதால் இந்நாளில் முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை எடுத்துக்கொண்டு அதில் மஞ்சள் போட்டு வண்ண மலர்களால் அலங்கரித்து எடுத்துக் கொள்ளுங்கள். நீர் இருக்கும் இடங்களில் எல்லாம் காவிரித்தாய் அவதரித்து நமக்கு அருளாசி வணங்குவாள் என்பது அனைவரும் அறிந்ததே.எனவே காவிரி நதிக்கரையோரம் உள்ள மக்கள் மட்டுமே இப்பண்டிகையை கொண்டாட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீரை பயன்படுத்தும் ஒவ்வொரு உயிரும் தாங்கள் பயன்படுத்தும் நீரை வைத்து வணங்கினாலே காவிரித்தாய் நமக்கு அதில் அவதரித்து நன்மைகள் செய்வாள். இவ்வாறு நீரை எடுத்துக்கொண்டு பூஜை அறையில் உள்ள இறைவனுக்கு தீப தூப ஆராதனையைக் காட்டி வழிபட வேண்டும்.

மேலும் இந்நாளில் நாவல் பழம் வைத்து இறைவனை வணங்குவது சாலச் சிறந்தது ஆகும். நாவல் பழம் இல்லாதவர்கள் கவலைப்பட வேண்டாம் உங்கள் பகுதியில் கிடைக்கும் பழ வகைகள் கொண்டு வழிபடலாம். மேலும் இந்நாளில் நீங்கள் என்ன காரியம் தொடங்க இருக்கிறீர்களோ அது சம்பந்தமான பொருளை வைத்து வழிபடுவதால் நன்மைகள் உண்டாகும்.நீங்கள் ஏதேனும் தொழில் தொடங்க விரும்பினால் உங்கள் வீட்டிலேயே பூஜை செய்து இறைவனை மனதார நினைத்துக் கொள்ளுங்கள் ஆடி மாதம் தொடங்கிய காரியம் ஒரு போதும் வீணாகாது தொட்டது தொடங்கும் வாங்கியது பெருகும் என்பார்கள் இந்த மாதத்தில்.

மேலும் படிக்க : தீர்க்க சுமங்கலி பாக்கியம் ஆடி கடை வெள்ளியில்

பொதுவாக ஆடி மாதத்தில் எந்த ஒரு சுப காரியங்களும் வைக்க மாட்டார்கள் அதற்கு காரணம் இம்மாதம் இறைவனுக்குரிய மாதமாக கருதப்படுகிறது எனவே மாதம் முழுவதும் இறைவனை நினைத்து தொடங்கும் காரியங்கள் உங்களுக்கு நல்லபடியாக அமையும். காவிரி அன்னையை இவ்வாறு வணங்குவதால் விவசாயம் செழித்து பசுமை நிறைந்த வாழ்க்கை அமையும். மேலும் இந்த இனிய நாளில் உங்களால் முடிந்த அளவு யாருக்கேனும் அன்னதானம் செய்யுங்கள் அது அவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் உங்களுக்கு அது மிகுந்த அதிர்ஷ்டமாக அமையும் எனவே மறவாமல் வீட்டில் பூஜை செய்து இறைவனை வணங்கி விட்டு ஏழை எளியோருக்கு உங்களால் முடிந்த அன்னதானத்தை செய்து இறைவனின் அருள் ஆசியை முழுமையாக பெறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *