ஆன்மிகம்ஆலோசனை

நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் ஆடி வெள்ளி

ஆடி மாதம் அம்பிகைக்கு உகந்த மாதம். மாரியம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் காலம் ஆடி மாதம். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகள் இணைந்தால் அந்நாள் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது. ஆடி மாதம் பண்டிகைகளை அழைக்கும் காலம் மழைக்காலம் தொடங்குவதும் இப்பொழுது தான்.

ஆடி மாதத்தில் வரும் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. இன்றைய தினங்களில் இல்லத்தின் வாசலில் கோலமிட்டு பூஜையறையில் குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களைப் பாட வேண்டும். பால் பாயசம், சர்க்கரை பொங்கல், நிவேதனம் செய்து வழிபடலாம்.

ஆடி செவ்வாயில் மேற்கொள்ளும் நோன்பு அவ்வை குறிப்பிடத் தக்கது. இந்த அவ்வை நோன்பை கடைபிடிப்பதால் விரைவில் திருமணம் நடைபெறும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

இந்த நோன்பில் பச்சரிசி மாவுடன், வெல்லம் கலந்து உப்பில்லாமல் கொழுக்கட்டை செய்வார்கள். பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் இந்த விரதம் இரவு பத்து மணிக்கு மேல் துவங்கி, ஆண்கள் யாரும் அந்த இடத்தில் இருக்கக்கூடாது. பின்னர் அவ்வை கதையை வயதான பெண்மணி கூறுவார்.

அவ்வை வேண்டி கொழுக்கட்டை நிவேதனம் செய்து இரவைக் கழித்துக் கொள்கின்றனர். நள்ளிரவில் பூஜை செய்து வழிபடுவார்கள். இந்த வழிபாடு மதுரை கன்னியாகுமரி மாவட்டங்களில் பல இடங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

ஆடி வெள்ளிக்கிழமைகளில் ஆலயங்களில் குத்து விளக்கு பூஜை நடைபெறும். சுமங்கலிப் பெண்களுக்கு தேங்காய் பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றோடு ரவிக்கைத் துணியும் வைத்துத் தருவது விசேஷமாகும். க

கொரோனா காலத்தில் கோவில்களுக்குச் செல்ல முடியாததால் வீட்டிலேயே குத்துவிளக்கு பூஜையும் செய்து வழிபடலாம். ஆடி வெள்ளிக் கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை. ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *