வீட்டில் மங்கள காரியங்கள் நடைபெற ஆடி செவ்வாயில் இதை செய்ய மறவாதீர்கள்
ஆடி செவ்வாயிலும், வெள்ளிக்கிழமை நாட்களிலும், வீட்டு வாசலில் மாவிலை மற்றும் வேப்பிலை தோரணங்களை கட்ட வேண்டும். அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் இதை தவறாமல் செய்து வரலாம்.
மற்ற மாதங்களில் வரும் செவ்வாய், வெள்ளி. ஆடி மாத செவ்வாய் வெள்ளி அதிக நன்மைகளை கொடுக்கக்கூடியது. இந்த நாட்களில் அம்பாளுக்கு பிடித்த ஸ்லோகங்களைப் பாராயணம் செய்து வழிபட வேண்டும்.
உங்களால் முடிந்த நைவேத்தியங்களை அம்மனுக்கு படைத்து வழிபட்டு வரலாம். பொதுவாக கடலைப் பருப்பு பாயாசம், கேசரி, அவல் பாயாசம், பருப்பு கலந்த சர்க்கரை பொங்கல், உங்கள் சக்திக்கு ஏற்ப ஏதோ ஒரு நைவேத்யத்தை படைத்து வழிபட வேண்டும்.
மேலும் இந்த நாட்களில் வயதான தம்பதியர்களிடம், பெற்றோர்களிடமும் ஆசீர்வாதம் பெற்று மஞ்சள் அரிசி கலந்த அட்சதையை பெற்றுக் கொள்ள வேண்டும்.உங்களால் முடிந்தால் அவர்களுக்கு புடவை, வேஷ்டி எடுத்துக் கொடுத்து ஆசிர்வாதம் பெறலாம்.
வீட்டில் பல வருடங்களாக தடையுடன் இருந்த திருமணம் முதலான வைபவங்கள் விரைவிலேயே நடைபெறும் என்பது நம்பிக்கை. மேலும் உங்கள் குடும்பத்தை இன்னும் மேன்மைப்படுத்தும் இந்த ஆசீர்வாதத்தால் நிம்மதியும், அமைதியும் இல்லத்தில் நிறைந்திருக்கும்.
வயது முதிர்ந்த தம்பதிகளிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ளலாம். வீட்டில் பெரியவர்கள் இல்லை என்றால் அக்கம்பக்கத்தினர் உள்ள பெரியவர்களிடம் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளலாம். வயது முதிர்ந்த தம்பதிகளிடம் நமஸ்கரித்து ஆசி வாங்கும் போது தம்பதிகளிடையே ஒற்றுமை இன்னும் பலப்படுத்தும்.
குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். இன்றைய காலகட்டத்தில் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவது குறைந்து வருகின்றன. என்பது வருத்தத்திற்குரியது. சிறுவயது முதலே குழந்தைகளுக்கும் இதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.