ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்

ஆடி பிரதோஷத்தில் அம்மனை வழிபடலாமா???

ஆடி மாதம் என்றாலே அது இறைவனை வணங்கும் மாதமாக கருதப்படுகிறது. இம்மாதத்தில் இறைவனை நினைத்து பிரார்த்தனை செய்தால் நாம் வேண்டிய வரங்களை இறைவன் கொடுப்பார் என்பது அனைவரின் நம்பிக்கையாக உள்ளது. ஆடியின் சிறப்புகள் பலவற்றை நாம் பார்த்துள்ளோம் அதில் இன்றைய தினம் மிக மிக விசேஷமான தினத்தைப் பற்றி தான் பார்க்க உள்ளோம்.

சிவனுக்குரிய சிறப்பு தினமாக நம் அனைவராலும் பூஜிக்கப்படும் நாள் பிரதோஷம். பிரதோஷம் என்பது ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை தேய்பிறை முடிந்து மாலை 4:30 மணி முதல் 6 மணி வரை வரக்கூடிய நாளாகும். செல்வத்திற்காக தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது ஏற்பட்ட விஷத்தை அவர்களை காப்பாற்றுவதற்காக சிவபெருமான் ஆலகால விஷத்தை பருகினார்

மேலும் படிக்க ; ஆடி முதல் வெள்ளி அன்று முதலில் வணங்க வேண்டிய தெய்வம்

தனது கணவரின் உடலில் விஷம் பரவுவதை கண்ட பார்வதி தேவி தனது கைகளால் சிவபெருமானின் கழுத்தை இறுக பிடித்துக் கொண்டார். இதனால் விஷம் சிவபெருமானின் உடலில் பரவாமல் கழுத்திலேயே நின்று விட்டது. அந்த ஒரு காலம் தான் பிரதோஷம் என்று அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அம்மனுக்குரிய விசேஷ மாதமான ஆடியும் சிவபெருமானுக்குரிய சிறப்பு தினமான பிரதோஷமும் ஒன்றாக வந்துள்ளது .இத்தகைய தினத்தில் அம்மனையும் சிவபெருமானையும் சேர்த்து கோவில்களில் பூஜை செய்வர்.

இந்த அரிய தினத்தில் நீங்கள் காலையில் எழுந்து குளித்துவிட்டு புத்தாடை அணிந்து பூஜை அறையை சுத்தம் செய்து சிவபெருமானை அலங்கரித்து மனமுருக ஸ்தோத்திரங்களை பாடி இந்த தினம் முழுவதும் அன்னையையும் அப்பனையும் நினைத்து மாலை வேளையில் கோவிலுக்கு சென்று வாருங்கள் முடிந்தால் அர்ச்சனைக்கு பால், தயிர், இளநீர் ,சந்தனம், வில்வ இலை ஆகியவற்றை வாங்கி கோவில்களுக்கு கொடுங்கள். இல்லை என்றால் உங்கள் வீட்டிலேயே உள்ள சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வில்வ இலையால் அர்ச்சனை செய்து ஸ்லோகங்களை பாடி மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.

இன்று நீங்கள் வேண்டும் வரம் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். மனதில் அமைதி நிலவும் குடும்பத்தில் இதுவரை ஏற்பட்டு வந்த பிரச்சனைகள் நீங்கி குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமையும் அன்பும் ஏற்படும். ஆடி பிரதோஷத்தில் அம்மனையும் சிவபெருமானையும் ஒன்றாக சேர்த்து வழிபடுவதால் கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *