ஆன்மிகம்ஆலோசனை

ஆடி மாத இரண்டாவது ஞாயிறு மகிமைகள்

ஆடி மாதம் என்றாலே அது அம்மனின் மாதமாக கருதப்படுகிறது நாம் எங்கு சென்றாலும் அம்மனின் திருநாமங்களும் அம்மனை பற்றிய செய்திகளையுமே இம்மாதத்தில் காண முடியும். இறைவனுக்குரிய ஆடி மாதம் முழுவதும் வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமை சிறந்த தினமாகும். அதிலும் ஆடி ஞாயிறு மிக மிக சிறப்பு வாய்ந்தவையாகும் ஏனென்றால் இது சூரிய பகவானுக்குரிய நாளாக உள்ளது ஆதித்தனின் நாளில் அன்னதானம் செய்தால் செல்வ செழிக்கும் வாழ்வில் இன்பமும் பொங்கும் என்பது ஐதீகம் அதிலும் ஆடி ஞாயிறு அன்று அன்னதானம் செய்வது லட்சுமி கடாட்சத்தை உண்டாக்கும்.

ஆடி மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது அம்மனும் அம்மனுக்கு ஊற்றும் கூழ், வேப்பிலை ஆகியவைதான். தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பார்கள். அத்தகைய சிறந்த தானத்தை சிறந்த நாளில் நாம் செய்வதால் பல்வேறு நன்மைகள் சேரும். எனவே ஆடி ஞாயிற்றுக்கிழமை அனைவரும் தங்களால் முடிந்தவரை கேழ்வரகு கூழ் செய்து வாழ்வில் வறியவர்களுக்கு ஏழை எளியோருக்கு தானம் செய்வதால் கோடி புண்ணியம் உண்டாகும். உங்களால் கூழ் செய்து ஊற்ற முடியவில்லை என்றால் கவலை வேண்டாம். ஆடி மாதம் முழுவதுமே அனைத்து அம்மன் கோவில்களிலும் கூழ் ஊற்றுவார்கள் .

மேலும் படிக்க : ஆடி பிரதோஷத்தால் குழந்தை பாக்கியம் இதை செய்தால்…

அதற்கு உண்டான பணத்தை உங்களால் முடிந்த அளவு நீங்கள் கொடுக்கலாம் அல்லது கூழ் செய்வதற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்தாலே போதும் அந்த புண்ணியம் உங்களுக்கு வந்து சேரும். எனவே மறக்காமல் அனைவரும் ஆதித்தனின் திருநாளும் அம்மனின் உகந்த நாளுமான இந்த ஆடி ஞாயிற்றுக்கிழமை அன்று கூழ் செய்து ஏழை எளியவர்களுக்கு தானம் செய்து அம்மனின் முழு அருள் கிரகத்தையும் பெறுங்கள்…

முடிந்தால் நீங்களும் அம்மன் கோவில்களுக்கு சென்று அம்மனை தரிசித்து விட்டு அங்கு கொடுக்கும் கூல் பிரசாதத்தை வாங்கி உண்டு மகிழுங்கள் கூழ் ஊற்றுவது வெறும் பக்தியால் மட்டுமல்ல ஆடி காற்றில் அம்மியும் நகரும் என்பார்கள்.இந்த காற்றின் வேகத்தால் நோய் கிருமிகள் எளிதில் பரவும் மாதமாகவும் இம்மாதம் உள்ளது எனவே ஆடி மாதத்தில் சத்தான உணவுகளை உட்கொள்வது மிக மிக அவசியமாகும் நாம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நோய் கிருமிகளிடமிருந்து நம்மால் பார்த்துக் கொள்ள முடியும். எனவே இந்த தானத்தை செய்வதால் நீங்கள் இறைவனின் அருளையும் பெற முடியும் அனைத்து உயிர்களையும் நோய்க்கிருமிகளிடமிருந்து காக்கும் ஒரு ஆரோக்கியமான உணவை அளித்த பயனும் உங்களுக்கு வந்து சேரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *