ஆன்மிகம்ஆலோசனை

ஆடி முதல் வெள்ளி அன்று முதலில் வணங்க வேண்டிய தெய்வம்

லக்ஷ்மி தேவி பார்வதி தேவி என அனைத்து தேவைகளின் திருவுருவமான அம்மனின் விருப்பமான மாதம் ஆடி மாதமாகும் .ஆடி மாதத்தில் தான் அம்மன் விரும்பி அனைத்தையும் உண்டு மனமகிழ்ந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வழங்கி இவ்வுலகை காப்பார் என்பது ஐதீகம். அம்மனுக்கு ஒரே இந்த விசேஷ மாதத்தில் நாம் பல பூஜைகளை செய்வோம் பல்வேறு பிரார்த்தனைகளை அம்மன் வைப்போம் இவை அனைத்துமே செய்வதற்கு முன் முதன் முதலில் நாம் வணங்க வேண்டிய தெய்வத்தை வணங்கி விட்டு அவரிடம் முதலில் பிரார்த்தனையை வைத்துவிட்டு அவரின் திருவருளால் பிறகு நாம் இந்த மாதத்தில் என்ன செய்தாலும் அதன் பலனை முழுமையாக அடையலாம் அப்படி எந்த தெய்வத்தை நாங்கள் வணங்குவது என்று சிந்திக்கிறீர்களா வேறு யாருமில்லை நம் குலத்தைக் காத்து பரம்பரையை செழிப்புடன் வாழ வழி செய்யும் குலதெய்வம் தான் நாம் ஆடி மாதத்தில் முதலில் வணங்க வேண்டிய தெய்வமாகும்.

ஆடி மாத முதல் வெள்ளியில் குலதெய்வத்தை வணங்கும் முறை

ஆடி மாத முதல் வெள்ளியில் குலதெய்வத்தை வணங்கும் முறையை பின்வருமாறு பார்த்து பயன்பெறுவீர். அத்தனை அம்சங்களும் நிறைந்த ஆடி மாதத்தில் நாம் எதை செய்தாலும் அது நன்மையிலேயே வந்து முடியும் அதிலும் வெள்ளிக்கிழமை என்பது அம்மனுக்கு உரிய மங்களகரமான நாளாகும். இத்தனை சிறப்புகள் வாய்ந்த ஆடியும் வெள்ளையும் ஒன்றாக வரும் ஆடி முதல் வெள்ளிக்கிழமை அன்று முதலில் நம் குலதெய்வத்தை வணங்க வேண்டும். ஆடி வெள்ளிக்கிழமை அன்று அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து நீராடி விட்டு நமது பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் பின்பு தெய்வங்களை வண்ண வண்ண மலர்கள் கொண்டு அலங்கரித்துக் கொள்ளுங்கள் நாம் பூஜை அறைக்குள் சென்றாலே தெய்வீக தன்மையும் மன நிம்மதியும் கிடைக்கும் அளவிற்கு வாசனை திரவியங்கள் கொண்டு பூஜை அறையை அலங்கரித்து விடுங்கள் பின்பு உங்களது குலதெய்வத்தின் படத்திற்கு மாலை அணிவித்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க : ஆடி பிரதோஷத்தில் அம்மனை வழிபடலாமா???

உங்கள் குல தெய்வத்திற்கு உருவம் இல்லையென்றால் உங்கள் குல தெய்வத்தை நினைத்து ஒரு தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் குல தெய்வத்திற்கு உரிய ஸ்லோகங்களை மனதார பாடி மணமுகர்ந்து உங்கள் பிரார்த்தனைகளை உங்கள் குலதெய்வத்தின் முன் வையுங்கள். குலதெய்வத்திடம் மனம் உருக வேண்டிய பின் காணிக்கை முடிந்து வைத்து பின்பு எந்த காரியமாக இருந்தாலும் தொடங்குங்கள்.. உங்கள் குலதெய்வத்தின் திருவருளால் அம்மனின் அனுகிரகத்தால் நீங்கள் தொட்ட காரியம் தொடங்கும் நீங்கள் நினைத்த அனைத்தும் நல்லபடியாக அமையும். எனவே எப்பொழுதும் எந்த காரியமாக இருந்தாலும் முதலில் உங்கள் குலதெய்வத்தை நீங்கள் ஆடி வெள்ளிக்கிழமை அன்று நீங்கள் இந்த முறைப்படி உங்கள் குலதெய்வத்தை வணங்கினால் அனைத்தும் சுபமாக முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *